தமிழகம்:
கடந்த காலமாக நம் அனைவரிடமும் வைரலான யோயோ(YOYO) என்ற ஆடியோ சாட் ரூம் App-யில் நடக்கும் விபரீத செயல்கள்….
யோயோ(YOYO) என்ற சமூக தளத்தில் “உள்ள வாங்க புல்ல தரேன்” என்று டைட்டில் வைத்து அந்தக் குழுவில் ஆபாச பேச்சுக்கள் உடன் உரையாடும் காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது. சமீபகாலமாக இதுபோன்ற சமூக ஊடகங்கள் மீது ஏற்கனவே சில சர்ச்சைகள் இருந்தாலும் தற்பொழுது பெண்களை ஏலம் விடுவதும், அவதூராக உரையாடுவதும் கேவலம் மற்ற செயலாகும். இச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் போலியான முகவரிகள் மூலம் ஊடுருவது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி ஃபேஸ்புக், டிவிட்டர் -யில் உள்ள பெண்பிள்ளைகளின் கணக்குகளில் உள்ள புகைப்படங்களையும் பயன்படுத்துவது அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது.
இவ்வகையான செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் பின்னர் வரும் குழந்தைகளும் இதை பின்பற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் இது இன்னும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் பெற்றோர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வகையான சமூக தளத்தில் ஒரு சில நல்ல குழுக்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் ஒரு சில நபர்களால் இவ்வகையான தளங்கள் இருள் சூழ்கிறது.
– வால்ட்டர்