கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு பரிதாப பலி..!

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில்  கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு பரிதாபமாக உயர்ந்தது.

மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள மட்டக்காரர்  தெருவை சேர்ந்தவர் விவசாயி மாதையன். இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்றபோது  அருகிலிருந்த 30 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்தது. இதுதொடர்பாக நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர். கயிறு மூலம் கிணற்றில் இறங்கி பொதுமக்கள் உதவியுடன் பசுமாட்டை மேலே கொண்டு வந்தனர். பின்னர் அருகில் இருந்த விவசாய தோட்டத்தில் புதைக்கப்பட்டது. பசுமாடு  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!