சேலம்:
கடந்த 12.02.22 ந் தேதி சேலம் உடையாப்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகள் கவிநயா (5) என்பவர் வீட்டில் இருந்து காணவில்லை என காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின் பேரில் புலிக்குத்தி ஜங்ஷன் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.தொப்பகவுண்டன் மற்றும் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் ஆகியோர்கள் மீட்டு பெற்றோர்கள் வசம் ஒப்படைக்க உதவி புரிந்தார்கள். இச்செயலை இன்று 14.03.22-ந் தேதி காவல் ஆணையாளர் திரு.நஜ்மல் ஹோடா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
in
தமிழகம்