தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன், வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று ஏற்கனவே விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன், தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தின் தற்போதைய மொத்த கடன் அளவு 13.18 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

வெள்ளை அறிக்கையின் விவரம்

தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி.

ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன். மற்றவை பொதுத்துறைகள் பெற்றுள்ள கடன்.

கடந்த திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு வாங்கிய ரூ.5 லட்சம் கோடி கடனை விட, கடந்த திமுக ஆட்சியில் மட்டுமே அதிக கடன்(ரூ.5 லட்சம் கோடி) வாங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை 2.25%-லிருந்து 2.22%-ஆக மோசமடைந்துள்ளது.

வருவாய் பற்றாக்குறை 2026-ம் ஆண்டு ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், 2021-ம் ஆண்டு ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2026-ம் ஆண்டு ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3% அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில், அன்றாட செலவுகளுக்கே கடன் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில், தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதம் உள்ளது.

தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில், வட்டி செலவீனம் 22.8 சதவீதம் ஆகும்.

தமிழ்நாடு மின் வாரரிய குழுமத்தின் கடன் ரூ.2.47 கோடி ரூபாய்.

தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு ரூ.67 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது.

போக்குவரத்துத் துறை 74.6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

ஒரு கிலோமீட்டருக்கு 78.81 ரூபாய் செலவாகும் நிலையில், வரவு 25 ரூபாய் மட்டுமே.

Source: Read Full Article