17வது பேரவைக்கு தேர்வான MLAக்களுக்கான இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய் - பேரவை விதிகள், சட்டப்பேரவைக்குள் உறுப்பினர்கள் எப்படி செயல்படுவது உள்ளிட்டவை குறித்து MLAக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 14.060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1,11,480 ரூபாய்க்கு விற்பனை

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பேரூராட்சியின் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு புழல் சிறையில் அடைப்பு

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட 3 வயது குழந்தையின் பெற்றோரிடம் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.8 லட்சம் இழப்பீட்டுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் குமார்

நெல்லையில் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பெருமாள் (28) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

“தங்களது குழந்தைகளை பலி கொடுக்கவா உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தார்கள்?” அதிகரிக்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் - கிருஷ்ணசாமி விமர்சனம்

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே தத்தனூரில் வீட்டில் ஏற்பட்ட தீயால் அங்கிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து - 7 பேர் படுகாயம்

நெல்லை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி- வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 12 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது

அரக்கோணத்தில் கூட்டுறவு மேலாண்மை துணை பயிற்சி நிலையம் அமைக்க அதற்கான தற்காலிக இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் வி.காந்திராஜ்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு - தூத்துக்குடியில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மீன் வர்த்தகம்.. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சியில் மீனவர்கள்..!

Source: Read Full Article