DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?

DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
News Image

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தமிழ்நாட்டில் அரசியல் களம் ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து வருகிறது. இந்த தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக தொடர் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது.

விஜயபாஸ்கர் விலகல்:

தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பான விவகாரம், திமுக-வுடனான கூட்டணி வைக்க முயற்சித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் உண்டாகியது. அதிமுக எம்எல்ஏ-க்கள் 4 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில், 5வது எம்எல்ஏ-வாக இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார்.  இது அதிமுக-வினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

திமுக-வா? தவெக-வா?

இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது தவெக செல்லப்போகிறாரா? அல்லது திமுக செல்லப்போகிறாரா? என்ற மிகப்பெரிய கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சி விஜயபாஸ்கர் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் தலைவர் ஆவார். இரட்டை இலை, அதிமுக-வை கடந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கரின் செல்வாக்கு மிகப்பெரியது. அவர் சுயேட்சையாக நின்றாலும் விராலிமலை தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் என்றே கூறப்படுகிறது.

விரும்பாத திமுக:

விராலிமலை தொகுதியில் கடைசியாக நடந்த 4 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற விஜயபாஸ்கர் தற்போது எந்த பக்கம் செல்லப்போகிறார்? என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அவர் திமுக-விற்கு வருவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், புதுக்கோட்டை திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் அவர் திமுக-விற்கு வருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் புதுக்கோட்டையை தனது கோட்டையாக வைத்துள்ள விஜயபாஸ்கர் திமுக பக்கம் வந்தால் அறிவாலயமே புதுக்கோட்டையை அவர் வசம் ஒப்படைத்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. இதனால், அவர் திமுக பக்கம் வராமல் இருக்கவும் புதுக்கோட்டை மாவட்ட திமுக வட்டாரம் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு தளபதியா?

இதனால், அவர் தவெக பக்கம் செல்வதற்கான வாய்ப்புகளே பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும் கீழ்மட்டத்தில் தவெக இன்னும் வளர்ச்சி அடைய வேண்டிய சூழலிலே உள்ளது. இதனால், விஜயபாஸ்கர் தவெக பக்கம் சென்றால் அது தவெக-விற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அந்த கட்சியினர் கருதுகின்றனர். மேலும், அரசியல் அனுபவம் கொண்ட அவர் தவெக பக்கம் வந்தாலும்  அவருக்கே விராலிமலை தொகுதியில் போட்டியிடவும் தவெக வாய்ப்பு வழங்கும் என்றும் கருதப்படுகிறது.

அதிமுக-வின் செங்கோட்டையன் தேர்தலுக்கு முன்பே தவெக-வில் இணைந்தாலும் தேர்தலுக்கு பின்பு முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட தவெக-வில் இணைந்து வருவது தேர்தலுக்கு முன்பு முதல் பணியாற்றி வந்த தவெக-வினருக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜயபாஸ்கர் அடுத்த எந்த கட்சியில் இணைய உள்ளார்? என்ற அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks