Madurai: பேன்ஸி கடைக்குள் புகுந்து சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. தட்டித்தூக்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை!

Madurai: பேன்ஸி கடைக்குள் புகுந்து சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. தட்டித்தூக்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை!
News Image

மதுரையில் பேன்ஸி கடை ஒன்றில் வேலை பார்த்த 17 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

ஆள் இல்லாத நேரத்தில் தாலிக்கட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் செயல்படும் பேன்ஸி கடை ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வேலைப் பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல சிறுமி பணிக்கு வந்துள்ளார். அந்த பெண்ணுக்கும் திருமங்கலம் புறநகர் பகுதியைச் சேர்ந்த மாரி என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் இருந்துள்ளது. வேலைக்கு வரும் நேரம், பணி நேரத்தில் வாடிக்கையாளராக வருவது போன்ற செயல்கள் மூலம் தங்கள் காதலை இருவரும் வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே நேற்று மதியம் திடீரென மாரி சிறுமி வேலை செய்யும் கடைக்கு வந்துள்ளார். கடையில் பணியாற்றும் மற்றொரு பணியாளர் வெளியே சென்றிருக்கிறார். அப்போது மாரி தான் கொண்டு வந்திருந்த தாலியை எடுத்து அந்த சிறுமியின் கழுத்தில் கட்டியுள்ளார். பின்னர் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதற்கிடையில் வெளியே சென்ற கடையின் மற்றொரு பணியாளர் சிறுமியின் கழுத்தில் தாலி தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து என்னவென்று விசாரித்துள்ளார். மாரி தனக்கு தாலி கட்டியதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேன்ஸி கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அந்த பணியாளர் உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

சிங்கப்பெண் அதிரடிப்படை சம்பவம்

அதேசமயம் இந்த திடீர் கல்யாணம் குறித்து சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாருக்கும் தகவலளிக்கப்பட்டது. இதனையறிந்த சிறுமியின் காதலர் மாரி அங்கிருந்து நைசாக நழுவினார். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சிறுமியிடமும், அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சிறுமியை மகளிர் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Also Read: Thirumavalavan: நான் தேர்தலில் நிற்காமல் போனதற்கு திமுக தான் காரணம்.. ஒப்புக்கொண்ட திருமாவளவன்!

இதனையடுத்து தனது வீட்டில் பதுங்கியிருந்த மாரியை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மாரியிடம் விசாரணை நடத்தியபோது அவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமியிடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் மாரியின் நிலையை எடுத்துச் சொல்லி அறிவுரை வழங்கினர். பின்னர் சிறுமியை இனிமேல் இப்படி செய்யக்கூடாது என அறிவுறுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks