வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவற்றில், தவணை முறையில் வீடுகள் பொது மக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு வீடுகளை ஒதுக்கீடு பெற்றவர்கள், உரிய காலத்தில் தவணை தொகையை செலுத்த வேண்டும். செலுத்த தவறியவர்கள் நிலுவைத் தொகை செலுத்த, அபராத வட்டியில் வாரியம் சலுகை வழங்கியது.

அதன் பின்னும் 150 - க்கும் மேற்பட்டோர் தவணை தொகையை செலுத்தாமல் இருப்பது, வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வீடுகளின் ஒதுக்கீட்டாளர்களுக்கு, வாரியம் சார்பில் கோட்ட அலுவலகங்கள் வாயிலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு உரிய பதில் அளிக்காதவர்களின், வீடு ஒதுக்கீடை ரத்து செய்ய, வாரியம் முடிவு எடுத்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இது குறித்து, வீட்டுவசதி வாரிய உயரதிகாரி கூறியதாவது ;

வாரிய திட்ட பகுதிகளில், நிலுவை தவணை தொகை செலுத்தாத வீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதில், தவணை செலுத்தாமல், பல ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ள வீடுகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டன. அதன் அடிப்படையில் இறுதி எச்சரிக்கை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்ததும், சம்பந்தப்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்படும். இந்த வீடுகள் வாரியத்தின் சொத்தாக மாறிய பின், தேவைப்படுவோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த பகுதிகள் ?

சென்னை அண்ணா நகர், அம்பத்துார், முகப்பேர், கோவை, ஈரோடு, திருநெல்வேலி போன்ற இடங்களில், தவணை தொகை செலுத்தாத வீடுகளை வசப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Source: Read Full Article