மதுரையில் தீடீர் என கொட்டித் தீர்த்த மழை... அடுத்த அடுத்த நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கா?

மதுரையில் தீடீர் என கொட்டித் தீர்த்த மழை... அடுத்த அடுத்த நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கா?
News Image

தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய அருவிகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கோடை வெயில் தாக்கம்

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த சூழலில் வெயிலின் தாக்கம் லேசாக குறைந்த சூழலில் பள்ளிகள் சற்று தாமதமாக திறக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், 4 தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த சூழலில் மதுரையில் உஸ்னம் குறையாத நிலையே காணப்பட்டது. இன்று காலை முதல் வெயிலின் முகம் காலை முதல் காட்டிய நிலையில் மாலை 4 மணிக்கு கனமழை பெய்தது.

மதுரையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மதுரை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் லேசான முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் இன்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டில் பருவமழைச் சூழல் வலுப்பெற்று வருவதால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக இருந்த கடும் வெப்பம் ஓரளவு குறையக்கூடும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளது. பகல் நேரத்தில் வெப்பம் 37–38°C வரை இருக்கும். இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்பதால் வெளியே செல்லும்போது கவனமாக இருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக மதுரையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து கடுமையான வெப்பம் நிலவிய நிலையில், தற்போது உருவாகும் மேகமூட்டமான வானிலை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களுக்கு இது சற்றே சுகமான சூழலை ஏற்படுத்தும். மேலும் மதுரையை சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய அருவிகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks