" காதலை கைவிடு " கேட்காததால் அக்கா என்றும் பாராமல் துடிதுடிக்க கொன்ற தம்பி !! பரபரப்பு பின்னணி

" காதலை கைவிடு " கேட்காததால் அக்கா என்றும் பாராமல் துடிதுடிக்க கொன்ற தம்பி !! பரபரப்பு பின்னணி
News Image

சகோதரர் - சகோதரிக்கு இடையே வாக்குவாதம் - கொலையில் முடிந்த சம்பவம்

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி மேல கிராமம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - கண்ணகி தம்பதியினர். இவர்களுக்கு 23 வயதில் ராமலட்சுமி என்ற மகளும் , 22 வயதில் ராகுல் மற்றும் 21 வயதில் கிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் விவசாயம் செய்து வரும் நிலையில் ஆடு மாடுகளையும் வைத்து பராமரித்து வருகிறார்.

மேலும் ராமலட்சுமி கங்கை கொண்டான் சிப்காட்டில் தனியார் சோலார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராகுல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக இருந்து வருகிறார். முத்து கிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார்.

அனைவரும் வேலைக்கு சென்று விட்டு வந்து உணவருந்திய நிலையில் இரவு ராமலட்சுமி செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அவரது பெற்றோர் வீட்டுக்கு பின்புறம் கொட்டகையில் கால்நடைகளுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்த நிலையில் , ராமலட்சுமிக்கும் அவரது சகோதரர்  கிருஷ்ணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மாறி மாறி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் ராமலட்சுமியை வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்திருக்கிறார்.

காதலை கை விடுமாறு கண்டிப்பு

இதனை பார்த்து ராமலட்சுமியின் மற்றொரு சகோதரரான ராகுல் அலறிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் உள்ளே வந்து பார்த்த போது ராமலட்சுமி ரத்தவெள்ளத்தில் மிதந்து சுய நினைவின்றி கிடந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமலட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை செய்த கிருஷ்ணனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராமலட்சுமி ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து தோல்வி அடைந்துள்ளார். பின்னர் மீண்டும் ஒருவரை தற்பொழுது காதலித்து வந்ததாகவும் அது பிடிக்காமல் அவருடனான காதலை கை விடுமாறு முத்து கிருஷ்ணன் கண்டித்து வந்திருக்கிறார்

இதன் காரணமாக அவ்வப்போது அக்கா மற்றும் தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் அக்கா தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks