CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்

CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
News Image

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது,

வாழ்க்கை தரம் மேம்பாடு:

பொருளாதார வளர்ச்சி என்பது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை தமிழ்நாடு கொண்டுள்ளது. அதனை முன்னிறுத்தி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை அடையாளங்கண்டு, அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், "வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்" (Poverty-Free Tamil Nadu Mission) ஒன்றை எங்கள் அரசு முன்மொழிகிறது.

கோவையில் எய்ம்ஸ்:

அனைவருக்கும் வீடு நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசின் நிதி உதவியையும் நாடுகிறேன். உயர்தர மருத்துவச் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியை வழங்கவும், தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திடவும், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி:

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் என்பது பெண்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது. அவர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் சமூக நோக்கமல்ல, அது ஒரு பொருளாதார அவசியமாகும். பெண்களின் கல்வி, சுகாதாரம். பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாகத் திகழ்கின்றன.

42 விழுக்காடு பெண்கள்:

இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறப்பு பெண்கள் பாதுகாப்புப் பிரிவுகள் பொதுப் போக்குவரத்தில் அவசரகால நடவடிக்கை அமைப்புகள், விரிவாக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா வலைப்பின்னல்கள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க முன்மொழிகிறோம்.

மேலும், தொழில்நுட்பம் சார்ந்த காவல் பணிகள், விரைவான நடவடிக்கைகளுக்காக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" (Singappen Special Force) தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளை வலுப்படுத்துதலும் மற்றும் கிராமப்புறச் செழிப்பும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திலும் விவசாயம் முக்கியப் பங்காற்றுகிறது.

விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து குறு, சிறு மற்றும் பிற விவசாயிகளை உள்ளடக்கிய வகையில் ரூ.2.045 கோடி மதிப்பிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள்:

நமது கடலோர மீனவ சமுதாயங்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. பாக்  வளைகுடாப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதையும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்யுமாறு இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

மேலும், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும். அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்யவும் தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks