திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலத்தின் முதலமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் தமிழக நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைளை முதலமைச்சர் வைத்தார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியது என்ன?

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

* தமிழ்நாட்டிற்கு நிலுவலையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். கல்வி நிலுவை நிதியை விடுவிக்க புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென நிர்பந்திக்கக்கூடாது.

* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப வேண்டும்.

* சென்னை முதல் குமரி வரை அதிவேக ரயில்வழித்தடம் அமைக்க வேண்டும்.

* செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.

* கரூர் - கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.

* ஒகேனக்கல் 3ஆம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும்.

* இலங்கை, பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

* மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவற்கு தவெக அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார்.

Source: Read Full Article