ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 11.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையில் சாத்தூர்-விருதுநகர் வழித்தடங்களும், 12.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையில் மத்தியசேனை-சங்கரலிங்காபுரம் மற்றும் அழகாபுரி-மீசலூர் ஆகிய வழித்தடங்கள் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 407 Rly KM: 541/200-300 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 11.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையிலும், மத்தியசேனை-சங்கரலிங்காபுரம் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 417 Rly KM: 550/800-900 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதை மற்றும் அழகாபுரி - மீசலூர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 410 Rly KM: 544/400-500 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதை ஆகிய வழித்தடங்களில் 12.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையிலும், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.

இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய இரண்டு தினங்கள் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடங்களை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழிகளை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article