வெனிசுலா நாட்டில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் 32 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை உயரக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தலைநகரில் ஏற்பட்ட திடீர் பூகம்பம்

வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் பகுதியில் புதன்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அன்று தேசிய விடுமுறை நாள் என்பதாலும் மாலை நேரம் என்பதாலும் ஏராளமானோர் கட்டிடங்களுக்கு உள்ளே இருந்துள்ளனர்.

இரட்டை பூகம்பத்தால் அதிகாரப்பூர்வமாக 32 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 71 மற்றும் 7.5 அளவுகோலில் அடுத்தடுத்து 35 நொடிகள் இடைவெளியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உயிரிழப்புகள் கடுமையாக இருக்கலாம்

இந்தப் பேரழிவு, ஏற்படுத்தும் உயிரிழப்புகள் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள முதல்கட்ட மதிப்பீட்டின்படி, உயிரிழப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

அந்த அறிக்கையின்படி, "அதிக உயிரிழப்புகளும், கடுமையான சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளன. மேலும், இந்தப் பேரழிவு பரவலாக இருக்கக்கூடும். உயிரிழப்புகள் 10,000 முதல் 100,000 வரை இருக்கலாம் என்றும், இறப்பு எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டுவதற்கு 44% சாத்தியக்கூறு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article