மதுரை கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, தெரிவித்துள்ளார்.

கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசி( கோமாரி நோய் தடுப்பூசி )

NADCP–FMD 9 வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசி( கோமாரி நோய் தடுப்பூசி ) நமது மதுரை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP – FMD 9th Round ) மூலம் 2,07,150 மாட்டினங்களுக்கு கால் மற்றும் வாய்க்காணை நோய் வராமல் தடுக்கும் பொருட்டு இலவச தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பாக எதிர்வரும் 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படவுள்ளது.

கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

இதற்காக 65 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி பணி மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளது . இதில் நான்கு மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கால்நடை வளர்ப்போர் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால் மற்றும் வாய்க்காணை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article