Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு

Indian Citizenship:  பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
News Image

இந்திய மக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் குடியுரிமை ஆவண சான்றாக கருத முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24ம் தேதி பாஸ்போர்ட் சேவை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஜூன் 24ம் தேதியான நேற்று இந்த தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதாவது  இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பாஸ்போர்ட் குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம் அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் பாஸ்போர்ட் என்பது சர்வதேசப் பயணத்தை எளிதாக்குவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் முதன்மைப் பயண ஆவணம் மட்டும் தான் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் இந்திய பாஸ்போர்ட் இருந்தால் அவர்கள் இந்தியாவின் குடிமகன் என்று அர்த்தமில்லை எனவும் கூறியுள்ளது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால் உண்மையான இந்திய குடிமகன் என்பதை அடையாளப்படுத்தும் ஆவணமாக எதை தான் பயன்படுத்துவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆதாரை தொடர்ந்து பாஸ்போர்ட்

கடந்த 2009ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஆதார் அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் முறைகேடு செய்ய முடியாத ஒரு அடையாள சான்றாக ஆதார் திகழும் என சொல்லப்பட்டது. இதன்மூலம் அரசின் மானியங்கள், உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள்இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக மக்களை அடைய முடியும் எனவும் கூறப்பட்டது. ஆதார் அட்டை பெற சம்பந்தப்பட்ட நபரின் கைரேகை மற்றும் விழித்திரை ஆகியவை அடையாளமாக பார்க்கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில் ஆதார் அட்டையிலும் முறைகேடு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் ஆதார் குடியுரிமைக்கான உறுதியான சான்று அல்ல என்றும், அது வெறும் அடையாள ஆவணம் மட்டுமே என்று வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது பாஸ்போர்டும் குடியுரிமை ஆவணம் அல்ல என கூறப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் அடையாள அட்டையும் குடியுரிமை ஆவணமாகக் கருதப்படுவதில்லை. அது ஒரு நபரின் அடையாளத்திற்கும் முகவரிக்கும் சான்றாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

Also Read: Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!

குடியுரிமை சட்டம் சொல்வது என்ன?

இப்படியிருக்கையில் இந்திய குடியுரிமைச் சட்டங்களின்படி, ஒருவர் 1950ம் ஆண்டு ஜனவரி 26 முதல் 1987ம் ஆண்டு ஜூலை 1 வரை இந்தியாவில் பிறந்திருந்தால் அவர் பிறப்பால் இந்தியராக கருதப்படுகிறார். அவரது வழித்தோன்றலும் இந்தியராகவே கருதப்படுவார்கள்.  1987க்குப் பின் பிறந்தவர்களின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தாலே , அவர்களால் இந்திய குடியுரிமை கோர முடியும்.

அதேசமயம் இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட் அரசின் சொத்தாக பார்க்கப்படுகிறது. அதனால் அதன் மீது ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கப்படும் பட்சத்தில் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. ஆனால் பாஸ்போர்ட் இந்திய குடியுரிமை கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் இதனை குடியுரிமை ஆவணமாக இடம்பெற செய்திருக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks