அதிமுக துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த எம்எல்ஏக்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருந்தார். இதில், சிலர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இன்னும் சிலர் தவெக ஆதரவை வாபஸ் பெற்று மன்னிப்பு கடிதம் வழங்கினார்கள். ஆனால், அவர்களுக்கு பொறுப்பு வழங்காமல் இருந்தது.

இந்த் நிலையில், அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிடோருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சி பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு மீண்டும் அதே பதவிகளை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுக துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி.வீரமணி, திருத்தணி கோ.அரி, பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ண முரளி, மருதராஜா, செளந்தரராஜன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்,மணிகண்டன், அருண்மொழித்தேவன் ஆகியோர் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாகவும் சந்திரகாசி, சுப்பையா பாண்டியன் ஆகியோர் கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி செயலாளராக முன்னாள் எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி இணைச் செயலாளர்களாக தமிழ் அழகன், சல்மான் ஜாவித் ஆகியோரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Source: Read Full Article