TVK: ஆட்டம் காணும் அதிமுக! தவெக-விற்கு தாவும் முன்னாள் அமைச்சர்கள் - இதான் லிஸ்ட்

TVK: ஆட்டம் காணும் அதிமுக! தவெக-விற்கு தாவும் முன்னாள் அமைச்சர்கள் - இதான் லிஸ்ட்
News Image

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கடந்த தேர்தல் பல்வேறு அதிரடி திருப்பங்களை உருவாக்கியுள்ளது. பலரும் திமுக - அதிமுக இடையேதான் போட்டி என்று கருதி வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் தவெக ஆட்சியைப் பிடித்தது.

தவெக-விற்கு தாவும் முன்னாள் அமைச்சர்கள்:

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக-வில் ஏற்பட்ட மிகப்பெரிய உட்கட்சி மோதல் காரணமாக பலரும் அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமியில் கட்சியில் இருந்து பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான எம்சி சம்பத், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, பெஞ்ஜமின், எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோர் நாளை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் முதன்முதலாக அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த மிகவும் முக்கியமான தலைவர். அவர் தேர்தலுக்கு முன்பே இருந்து விஜய்க்கு பக்கபலமாக இருந்து தேர்தலில் வெற்றியைத் தேடி தந்தார். செங்கோட்டையன் போல தாங்களும் தவெக-வில் இணைந்திருந்தால் தங்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஆதங்கப்பட்டனர்.

இப்பவே போனாதான் பதவி:

அதிமுக எம்எல்ஏ-க்கள் 4 பேர் தங்களது எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலரும் இனியும் தாமதிக்காமல் தவெக-வில் இணைவதே தங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்று தவெக கூடாரத்தில் ஐக்கியம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் திக்குமுக்காடி வரும் அதிமுக, தற்போது தனது முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகளை இழந்து தடுமாறி வருகிறது. சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி இணைந்து கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியநிலையில், தவெக அமைச்சரவையில் இடம் வழங்காததால் அது அவர்களுக்கே எதிராக திரும்பியது.

அதிமுக தொண்டர்கள் ஆதங்கம்:

இதனால், எடப்பாடி பழனிசாமி இனிமேல் தனக்கு எந்த பொறுப்பும் வழங்கமாட்டார் என்று உறுதியான சூழலில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட அதிமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெக-விற்கு தயாராகி வருகின்றனர்.

அதிமுக-வை விஜய் இரண்டாக உடைக்கிறார் என்ற குற்றச்சாட்டை அதிமுக தொண்டர்கள் முன்வைத்த நிலையில், மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் இணைய இருப்பது அதிமுக தொண்டர்களுக்கு தவெக மீது ஆதங்கத்தை மேலும் அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் விஜயபாஸ்கரும் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர்கள் அதுதொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்காமலே உள்ளனர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks