ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
News Image

சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4 வது பிளாட்பாரத்தில் உள்ள படிக்கட்டில் நீல நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து பயணிகள், ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார், சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது சூட்கேஸிக்குள் ஆண் சடலம் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத வகையில் இருந்துள்ளது.

இதனால் ரயில்வே போலீஸாரும் பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சடலத்தை மீட்ட ரயில்வே போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில் ;

பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு உதவி ஆய்வாளர் மார்க்கபந்து தலைமையிலான போலீஸார், அந்த சூட்கேஸை மீட்டனர்.

சூட்கேஸிக்குள் ஆண் சடலம் மிகவும் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. மேலும், சூட்கேஸில் இருந்து ரத்தம் கசிந்த தடயங்கள் எதுவும் இல்லை.

சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு

வேறு இடத்தில் கொலை செய்து இங்கு வந்து சூட்கேஸை போட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். அதனால், சூட்கேஸை இங்கு போட்டது யார் என்று சி.சி.டி.வி மூலம் ஆய்வு செய்து வருகிறோம். காணாமல் போனவர்களின் விவரங்களையும் சேகரித்து விசாரித்து வருகிறோம் என கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks