இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
News Image

விழுப்புரம் : இந்தியா கூட்டணி சிதறி விடக்கூடாது என்று விரும்புகிறோம். எட்டாம் தேதி நடைபெறவுள்ள இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். திமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காது வருத்தம் அளிக்கிறது: திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அறையில் வன்னியரசுவை உட்கார வைத்த திருமாவளவன், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.,

திண்டிவனம் தொகுதியில் வன்னியரசு வெற்றி வாய்ப்பை வழங்கிய திண்டிவனம் தொகுதி மக்களுக்கும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்பாராத வகையில் இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் சூழலை மக்கள் உருவாக்கியுள்ளனர். சிவிக-வின் நீண்ட கால கணவு நனவாகும் வகையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க முடியாத சூழலில். அதிமுக, பாஜக ஆதரவை பெற முயற்சிக்காமல் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட மதசார்பற்ற சக்திகளின் ஆதரவை பெற முயற்சி செய்தது. எனவே விசிக ஆதரவு அளித்தது. விசிகவும் அமைச்சரவையில் இடம் பெறெ வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரின் அமைச்சரவையில் இடம் பெறுவது என முடிவு செய்தோம். வன்னிஅரசு சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சமூகநீதி முற்போக்கு கூட்டணி என்கிற உருவாவதற்கு குறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. அவரின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இடதுசாரிகளின் கருத்து சரியானது. நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

முன்னாள் அமைச்சர் நேரு மீது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளதால் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கருத முடியாது.

ஆட்சிக்கு வந்த இரண்டு வார காலம் தான் ஆகிறது கருத்து சொல்லி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்கிற முன்னெச்சரிக்கை கூட இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம் விஜய்யின் செயல்கள் திருப்தி அளிக்க கூடியவையாக இருக்கும் என நம்புகிறேன். புதிய ஆட்சி ஆறு மாத காலம் அமைதியாக இருக்க வேண்டும்.

இந்தியா கூட்டணி அமைந்ததில் திமுக-வின் பங்கு மகத்தானது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி கூடுகிறது என்பது உள்ளபடியே கவலைகளுக்கு கூடிய ஒன்று. அதற்காக பெரிதும் வருந்துகிறோம். இந்தியா கூட்டணி சிதறி விடக்கூடாது என்று விரும்புகிறோம். எட்டாம் தேதி நடைபெறவுள்ள இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் இந்த தேர்தலில் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே அண்ணாமலை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் வேறு முழக்கத்தோடு களம் காண விரும்புகிறார். பாஜகவின் இன்னொரு முகமாக இல்லாமல் புதிய முகமாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக தமிழ்நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் அரசியல் மூலமாக இருக்குமானால் அதனை வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.

மதுக்கடைகள் மூடப்பட்டது நல்ல முயற்சி. அதனை வரவேற்கிறோம். படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தவெக மீது தேர்தலுக்கு முன்பு விமர்சனங்கள் இருந்தது. சந்தேகம் இருந்தது உண்மை. ஆனால் ஆட்சி அமைக்க விஜய் அடுத்த நிலைப்பாடு எங்கள் ஐயத்திற்கு நேர் எதிராக இருந்தது. எனவே தவெக-வுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

அதிமுக பலவீனப்படுவது அந்த கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கே பலவீனத்தை ஏற்படுத்தும். திராவிட கட்சிகள் இரண்டும் வலுவாக இருந்த காரணத்தினால்தான் இங்கே பாஜக போன்ற மதவாத கட்சிகள் காலூன்ற முடியவில்லை. திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பலவீனப்பட்டால் இங்கே மதவாத சக்திகளுக்கு வாய்ப்பளிப்பதாக அமைந்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks