Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!

Jothimani MP: பாஜகவை முதல்ல பாருங்க.. அப்புறம் குறை சொல்லுங்க.. நயினாருக்கு ஜோதிமணி பதிலடி!
News Image

தவெக அரசு மீது அபத்தமான குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்கள் என்றால் பாஜகவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் கூட விழாமல் போகும் என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “குதிரைப்பேரத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள முடியாது என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அதனைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜோதிமணி, “ஜனநாயகத்தின் மரபுகளை, ஜனநாயகம் மீதான அடிப்படை கட்டமைப்புகளை எந்த கட்சியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். அதுதான் மக்களுக்கும் நல்லது. தவெக ஒரு புதிய கட்சி. 3 ஆண்டு காலத்தில் மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறார்கள். முதலமைச்சர் சொல்வது போல மக்கள் சாதி, மதம் பார்க்காமல் பல விஷயங்களைக் கடந்து வாக்களித்துள்ளார்கள். இந்த மாதிரி அரசியல் சூழலில் பல நல்ல விஷயங்களை அரசு கடைபிடிக்க வேண்டும். வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த வேண்டும் என முனைப்பில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளார். அதனால் பாசிட்டிவான அரசியல் நிலைப்பாட்டை விஜய் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மின்சாரத்துறையில் ஆவணங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருட்டு சம்பவம் குறித்து நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு ஜோதிமணி பதிலளித்தார். அதாவது இந்த விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு செய்து இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். தவெக அரசு பொறுப்பேற்று கொஞ்ச நாள் தான் ஆகிறது. கால அவகாசம் நாம் வழங்க வேண்டும். அமைச்சரவையில் இருக்கும் நிறைய பேருக்கு அரசியலில் கூட முன் அனுபவம் கிடையாது. அவர்கள் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி துறை சார்ந்த செயல்பாடுகளை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஆகவே இந்த மாதிரியான அபத்தமான குற்றச்சாட்டுகளை பாஜக சொல்லக்கூடாது. உங்க கட்சியிலேயே இருக்க முடியாது, பாஜக இனி தேறாது என அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையே வெளியேறவுள்ளார். நயினார் நாகேந்திரன் முதலில் அவர் கட்சியை பார்க்க வேண்டும். இந்த மாதிரி அபத்தமான குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்கள் என்றால் பாஜகவுக்கு விழும் 5 ஓட்டுகள் கூட கிடைக்காமல் போகும்.

இதையும் படிங்க: திமுக, அதிமுகவுக்கு எதிரான இணைந்த கட்சிகள்.. விஜய் தலைமையிலான கூட்டணி பெயர் அறிவிப்பு!

அதேசமயம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கவலையளிக்கக்கூடிய விஷயமாகும். எந்த ஆட்சியாக இருந்தாலும் சட்டப்பூர்வமான அணுகுமுறையால் மட்டுமே இப்பிரச்னைகளை நாம் தீர்த்து விட முடியாது. குற்றங்கள் நடக்காமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்க வேண்டும். உதாரணமாக ஆரம்ப கல்வியில் இருந்தே மாற்றத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும் என ஜோதிமணி கூறியுள்ளார். மேலும் நாங்கள் இதுவரை எங்களுக்கு அதை செய்துக் கொடுங்கள், இது வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தைக் கேட்கவில்லை. ஆனால் உள்ளாட்சி தேர்தல்  வரும்போது கூட்டணி என்ற முறையில் விஜய் அனுசரித்து போட்டியிட ஏற்பாடு செய்வார் என உறுதியாக நம்புகிறேன் எனவும் ஜோதிமணி கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks