Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக

Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
News Image

இந்தியா முழுவதும் பாஜக-வின் ஆதிக்கம் இருந்தாலும் தமிழ்நாடு அவர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக-வை வளர்க்க அவர்களது வழக்கமான பாணிக்கு மாற்றாக கட்சியில் இருந்து மாநில தலைமைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன், முருகன், அண்ணாமலை ஆகியோரின் தலைமைக்கு பிறகு கட்சியின் வளர்ச்சி வேறு மாதிரி இருந்தது.

அண்ணாமலையால் பாஜக அதிர்ச்சி:

குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜக-வை கீழ்மட்டத்தில் வளர்த்ததில் அண்ணாமலையின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால், இன்று பாஜக-வில் இருந்து விலகி தனி இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அண்ணாமலை பாஜக-வில் இருந்து விலகியிருப்பது பாஜக-வின் டெல்லி தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அண்ணாமலை தனி இயக்கத்தை தொடங்கியிருப்பதுடன் வரும் தேர்தலில் அரசியல் கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள சூழலில் பாஜக-வில் இருந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி அவரது இயக்கத்தில் இணைந்துள்ளனர். தற்போது வரை சுமார் 8 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

படுமோசமான நிலையில் பாஜக:

அண்ணாமலை திடீரென கட்சியில் இருந்து விலகியிருக்கும் சூழலில், அவர் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட உள்ள நிலையில் பாஜக-வும், தாமரை சின்னமும் அதளபாதாள நிலைக்கு போவது உறுதியாகியுள்ளது. இதை எப்படி ஈடு செய்யலாம்? மீண்டும் அண்ணாமலை போன்ற ஒரு முகத்தை எப்படி பாஜக-வில் உருவாக்கலாம்? என்று டெல்லி தலைமை மிகவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக அரசியலில் பாஜக-வின் மற்றொரு அணியாக அண்ணாமலை களமிறங்குகிறார் என்று பலரும் அதேசமயம் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவரது கட்சியில் பாஜக-வினர் பலரும் இணைந்து வரும் நிலையில், பாஜக-வின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகி உள்ளது.

சவாலாக மாறும் தமிழகம்:

திமுக - அதிமுக ஆகிய பழமையான திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இந்த தேர்தலில் விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது. இந்த சூழலில், அண்ணாமலையும் களமிறங்கினால் திமுக - அதிமுக - விஜய் - அண்ணாமலை - நாம் தமிழர் என 5 முனைப் போட்டியை பாஜக சந்திக்க நேரிடும். அண்ணாமலை தனது தனிப்பட்ட செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்காக பாஜக மீதுள்ள மதசாயம் தான் புதியதாக தொடங்க உள்ள கட்சி மீதும் விழுந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

ஏனென்றால், சிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்றால் அதற்கு மதச்சார்பற்ற கொள்கையையே கட்சிகள் கையில் எடுக்கும். அதே வியூகத்தை அண்ணாமலையும் கையில் எடுக்க உள்ளார். அண்ணாமலையின் விலகல் மோடி, அமித்ஷா உள்ளிட்ட டெல்லி தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தாலும், தமிழ்நாட்டில் அண்ணாமலையால் ஓரங்கட்டப்பட்ட பாஜக-வின் சில நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

புதிய தலைமை?

நயினார் நாகேந்திரன் தலைமையின் கீழ் அதிமுக கூட்டணியுடன் களமிறங்கிய பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த சூழலில், நயினாருக்கு பதிலாக விரைவில் புதிய தலைமையையும் பாஜக தேடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks