TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!

TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
News Image

TN Govt New Assembly: முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு அரங்கின் கட்டுமான பணிகள், வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்படுகிறது.

இடப்பற்றாக்குறையில் தலைமை செயலகம்:

பாரம்பரியமிக்க ஜார்ஜ் கோட்டையில் தான் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகம் மட்டுமின்றி, சட்டப்பேரவை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இங்கு கடுமையான இடநெருக்கடி நிலவுவதாக பல ஆண்டுகளகாவே புகார்கள் நிலவுகின்றன. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்தவும் போதுமான இடவசதி இல்லை என கூறப்படுகிறது.  இதனை காரணம் காட்டியே 2006-11 ஆட்சி காலத்தில் அண்ணா சாலையில் புதிய தலைமை செயலக கட்டடம் கட்டும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முன்னெடுத்தார். ஆனால், 2011ம் ஆண்டு ஆட்சி அமைந்ததும் அந்த கட்டடம் அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனால் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமை செயலக நடவடிக்கைகள் தொடர, தற்போது தவெக தலைமையிலான அரசு அமைந்த பிறகு மீண்டும் சட்டப்பேரவை இடநெருக்கடி பிரச்னை எழுந்துள்ளதாம்.

புதிய சட்டப்பேரவைக்கு திட்டம்:

தவெக தலைமையிலான அரசு அமைந்த பிறகு, தினசரி தலைமை செயலகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாம். முதலமைச்சர் விஜய் தினந்தோறும் தலைமை செயலகம் வந்துவிடுவதால், முந்தைய காலங்களில் போக்குகாட்டி வந்த அதிகாரிகளும் நாள்தோறும் ப்ரெசெண்டாகி விடுகின்றனராம். இதனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வாகனங்களுக்கே இடம் கிடைக்காமல், தலைமை செயலகத்திற்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக தலைமை செயல நிர்வாக பணிகளை மட்டும் ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து, தலைமை செயலக நடவடிக்கைகளை வேறு இடத்திற்கு மாற்ற அரசு பரிசீலித்து வருகிறதாம்.

முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு அரங்கம்..!

கொரோனா காலத்தில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நடவடிக்கைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டன. இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டப்பேரவை நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் தான், கடந்த திமுக ஆட்சியில் 525 கோடி ரூபாய் செலவில் முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என கூறப்படுகிறது. அதன் பிறகும் அடுத்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரே, இங்கு நடைபெற வாய்ப்புள்ளதாம். இதனை உணர்த்தும் விதமாக அண்மையில் கூட இங்கு நடைபெறும் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இறுதி முடிவு என்பது முதலமைச்சர் விஜயின் கையில் தான் உள்ளதாம்.

இதையும் படியுங்கள்: TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?

முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு அரங்க வசதிகள்:

கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு மிக அருகில் சர்வதேச தரத்திலான நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை நடத்தும் வகையில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 5,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட மாநாட்டுக் கூடம், சுமார் 10,000 பேர் பார்வையிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட பரந்த கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன. இதுபோக, பல்வேறு சிறிய மற்றும் பெரிய கூட்டங்களை தனித்தனியாக நடத்தக்கூடிய பல கூட்ட அரங்குகளளும் உள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks