சட்டப் பேரவையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;

மேகதாது விவகாரத்தில் திமுக சில திருத்தங்களை கூறியது. அதன் பின் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்டா மக்களுக்காக இந்த திருத்தம் மிகவும் அவசியமானது. மத்திய நீர்வளத்துறை ஆணையம் சில நிபந்தைகளோடு தான் உத்தரவை பிறப்பித்து இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும், மேகதாதுவில் அணை கட்ட கூடாது என பல முறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டங்களிலும் நமது எதிர்ப்பை நாம் தெரிவித்துள்ளோம். ஆனால் பிடிவாதமாக அணையை கட்டுவோம் என கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை கவனமாக கையாள வேண்டும் இல்லையென்றால் அவர்கள் பெரிய நடவடிக்கை எடுத்துவிடுவர்.

தீர்ப்பு எந்த வகையிலும் பாதிக்காது

மேகதாது விவகாரம் என்பது உச்சநீதிமன்றதில் கூட முடிவுக்கு கொண்டு வர முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது. மூத்த வல்லுனர்கள் ஆலோசனைபடி புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம் , இந்த கோரிக்கையால் உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது.

அதுமட்டுமன்றி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது நல்ல முடிவு தான். கருத்து வேறுபாடுகளை தாண்டி, திமுக இந்த கருத்தை கூறியுள்ளோம். அதனை முதல்வர் ஏற்று முன்மொழிந்து தீர்மானம் நிறைவேறி உள்ளது.

பெண்ணையாறு குறுக்கே அணை கட்ட கூடாது என்று கோரிக்கை வைத்த போது, உச்சநீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்கலாம் என்று கூறி உள்ளது. இந்த மேகதாது விவகாரத்தில் அதனை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்நிலையில் டெல்டா மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்கிற வகையில் தான் நடுவர் மன்றம் கேட்பது ஒரு முயற்சி. மக்களை பாதிக்கும் ஒரு நடவடிக்கையை நாம் அனுமதிக்க கூடாது. அனைத்து கட்சிகளும் ஓர் அணியாக இருந்து டெல்டா மக்களை பாதுகாக்க வேண்டும்

அந்த வகையில் , பேரவையில் மேகதாது தீர்மானம் திருத்தம் கொண்டு வரும் போது, யாரும் கருத்து கூறவில்லை என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article