தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது சட்டசபைக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியான திமுக ஆளுங்கட்சியான தவெக மீது சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அதற்கு தவெக அமைச்சர்கள் பதிலடி தரும் வகையில் பதில்களை அளித்தனர்.

திமுக விட்டுக்கொடுத்த முதலீடுகள்:

தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டின் முதலீடுகள் அண்டை மாநிலத்திற்குச் சென்றதாக திமுக நிர்வாகிகளும், திமுக ஆதரவாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் கீர்த்தனா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் அண்டை மாநிலத்திற்கு விட்டுக்கொடுத்த திட்டங்கள் 25 முதலீடுகள். அந்த 25 முதலீடுகளின் மதிப்பு 3.3 லட்சம் கோடி. அதன் காரணமாக தமிழ்நாட்டின் இளைஞர்கள் இழந்திருப்பது 2 லட்சத்து 3 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

இந்த திட்டங்களால் 7 மாநிலங்கள் பயன் அடைந்துள்ளனர். குஜராத்திற்கு டாடா செமி கண்டக்டர் ஆலை (2024), ஒடிசாவிற்கு ஜேஎஸ்டபுள்யூ ஆலை 2024, சுசுகி மோட்டார்ஸ் குஜராத் (2024), குஜராத்திற்கு மைக்ரான் டெக்னாலஜி, மகாராஷ்ட்ராவிற்கு டொயோட்டோ மோட்டார்ஸ் (2024) ஆகிய திட்டங்கள் சென்றுள்ளது.

என்னைக் கேட்பதா?

ஒவ்வொரு முறையும் இழந்துள்ளனர். 2.23 சதவீதம் இதுவாகும். இவர்கள் என்னைப் பார்த்து ஆந்திராவிற்கு வழியனுப்பி வைத்தேன் என்று கேட்கிறீர்கள்? 30 நாட்களில் நான் வழியனுப்பி வைக்கிறேன் என்றார்கள்?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் முதலீடுகள் தொடர்பாக வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரத்துடன் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

அமைச்சர் கீர்த்தனாவின் இந்த குற்றச்சாட்டிற்கு திமுக தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆட்சியில் பல்வேறு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றதாக பல கட்சியினரும் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு ஊழல், கமிஷனே முக்கிய காரணம் என்றும் பலரும் குற்றம் சாட்டியிருந்தனர்.

மேலும், அமைச்சர் கீர்த்தனா பேசும்போது தமிழ்நாடு அரசு எந்தெந்த நிறுவனத்தின் முதலீடுகளை கவர்வதற்கு பேசி வருகின்றனர் என்பதையும் பட்டியலிட்டார். மேலும், அந்த நிறுவனங்களின் முதலீடுகளையும் தமிழ்நாட்டில் கொண்டு வருவோம் என்பதையும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article