Top 10 News Headlines: சட்டமன்றத்தில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்.. சென்னை வரும் பிரதமர் மோடி.. 11 மணி செய்திகள் இதோ!

Top 10 News Headlines: சட்டமன்றத்தில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்.. சென்னை வரும் பிரதமர் மோடி.. 11 மணி செய்திகள் இதோ!
News Image

மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் திருத்தம் செய்ததில் விதிமீறல் நிகழ்ந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பேரவையில் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேகதாது திட்டத்தை முறியடிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில் கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெரியபாளையம் அம்மோனியம் வாயு கசிவு விபத்து தொடர்பாக சட்டமன்றத்தில் அமைச்சர் பர்வேஷ் விளக்கம் - இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை அடுத்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரயிலை இயக்க 4 மாதங்களுக்கு முன் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் இதுவரை செயல்படுத்தவில்லை.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்தியா - இலங்கை U19 மகளிர் கிரிக்கெட் போட்டிகளை காண அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில், இலங்கையின் முல்லைத்தீவை சேர்ந்த 9 வயது மாணவர் துஷ்யந்தன் காருஜன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதிமுகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் எந்தவொரு ஊழலும் பாஜக அரசால் செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனி கேன்வா செயலி முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் டிஜிட்டல், சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் Canva நிறுவனத்துடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மொபைல்போனில் ஆபாச படம் பார்த்து 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

குழப்பம் நிறைந்த உலகில் மன அமைதியை கண்டறிய யோகா உதவுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

பீகாரில் நீட் மறுதேர்வு எழுத மையத்திற்கு வந்த 9 ஆள்மாறாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks