HBD Joseph Vijay: முதல்வர் விஜய் பிறந்தநாள்.. முதல் ஆளாய் முந்திய கீர்த்தனா.. நள்ளிரவில் பட்டாசுகளால் ஜொலித்த சிவகாசி!

HBD Joseph Vijay: முதல்வர் விஜய் பிறந்தநாள்.. முதல் ஆளாய் முந்திய கீர்த்தனா.. நள்ளிரவில் பட்டாசுகளால் ஜொலித்த சிவகாசி!
News Image

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஜோசப் விஜய் முதல்முறையாக இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இளைய தளபதி டூ முதலமைச்சர்

குழந்தை நட்சத்திரமாக தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களில் நடிக்கத் தொடங்கிய விஜய் 1993ம் ஆண்டு எஸ்.ஏ.சி இயக்கத்திலேயே ஹீரோவாகவும் எண்ட்ரீ கொடுத்தார். இளைய தளபதி என்ற படத்துடன் அழைக்கப்பட்ட விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக உயர்ந்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குறிப்பாக பெண் ரசிகைகளை அதிகம் பெற்ற நடிகராக மாறினார். நடிகர் விஜய் என்பது போய் விஜய் அண்ணா, விஜய் மாமா, விஜி தம்பி என அனைவராலும் கொண்டாடப்பட்ட தளபதி விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்துள்ளார்.

Happy Birthday to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay Anna!

On this joyous occasion, the skies of Sivakasi were illuminated with a spectacular grand fireworks display, celebrating the birthday of our beloved Anna. The vibrant colours lighting up the… pic.twitter.com/1Ox1ziWB7x
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) June 21, 2026

2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய அவர், மிக குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று சாதனைப் படைத்துள்ளார். இப்படியான நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் விஜய் நடிக்கும் படங்களின் அப்டேட் வெளியாகி மகிழ்ச்சியை உண்டாக்கும். அப்படியான நிலையில் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகவும் விஜய் ஜொலித்து வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டம்

இப்படியான நிலையில் விஜயின் பிறந்தநாள் விழா நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ரத்தத்தானம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோயில்களில் சிறப்பு வழிபாடு என திரும்பும் திசையெங்கும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. அமைச்சர்கள் தொடங்கி கடைக்கோடி தொண்டர்கள் வரை இந்த பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி தொகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் பலரையும் கவர்ந்துள்ளது.

Also Read: CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்

ஆம். பட்டாசுக்கு பெயர் போன சிவகாசியில் இரவு நேரத்தில் வாண வேடிக்கை காட்டப்பட்டு பிறந்தநாள் இனிதே கொண்டாட்டப்பட்டுள்ளது. இதனை ஏராளமான மக்கள் தங்கள் வீட்டின் மாடிகளில் நின்று கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெய் கலந்து கொண்டார்.

இதுதொடர்பாக அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் முதலமைச்சர்  சி. ஜோசப் விஜய் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நமது அன்புக்குரிய அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, சிவகாசி வானம் கண்கவர் வாணவேடிக்கையால் ஒளிர்ந்தது. இரவு வானத்தை ஒளிரச் செய்த அந்த வண்ணமயமான காட்சிகள், அவரது தொடர்ச்சியான வெற்றி மற்றும் தலைமைத்துவத்திற்காக எண்ணற்ற மக்கள் கொண்டிருந்த உற்சாகத்தையும், அன்பையும், நல்வாழ்த்துக்களையும் பிரதிபலிக்கின்றன. அண்ணா நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், தமிழக மக்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்றவும் வாழ்த்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks