தேர்தல் முன்பு விஜயை விமர்சித்திருந்தாலும், அவரின் நிலைப்பாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காட்பாடி சட்டமன்ற தொகுதி விசிக செய்தி தொடர்பாளர் தம்பி அஜித் செல்வராஜ் திருமண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜய்க்கு ஆதரவு கொடுத்த விஷயத்தில் ஏன் உறுதியாக நின்றேன் என விளக்கமளித்தார்.

அதாவது, “நாங்கள் உயர்த்தி பிடிக்கிற அம்பேத்கரையும், பெரியாரையும் விஜய் உயர்த்தி பிடிக்கிறார். நாங்கள் பேசுகிற சமூக நீதியை அவர் பேசுகிறார். இதில் என்ன முரண்பாடு இருக்கிறது?. இன்னும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. அதில் குழப்பம் எதுவும் இல்லை. இதுதான் அரசியல் நுட்பம். அதனை புரிந்துக்கொள்ளாதவர்கள் தான் குழம்பி போய் என்னை குழப்பத்தில் இருக்கிறேன் என்கிறார்கள். தவெக ஆட்சியமைக்க முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இருந்தது. இரண்டு இடம் கொடுத்தால் தவெக ஆட்சியமைக்கும். ஒருவேளை கொடுக்காவிட்டால் வேறு மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும்.

அதாவது தவெக அதிமுகவை உடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் ஆதரவை பெற வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பாமக ஆதரவை பெற வேண்டும். இது வேண்டாம் என விஜய் முடிவெடுத்து திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணிகளாக இருக்கக்கூடிய 5 கட்சிகளுக்கு விஜய் வெளிப்படையாக கடிதம் எழுதினார்.

திருமாவளவன் ஆதரவு தராவிட்டால் நாங்கள் 4 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை தருகிறோம் என பாமக தயாராக இருந்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருவரின் ஆதரவும் எனக்கு தேவையில்லை என விஜய் நினைத்தது தான் அரசியல். தேர்தல் முன்பு திருமாவளவன் விஜயை விமர்சித்திருந்தாலும், அவரின் நிலைப்பாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இந்த விளக்கத்தை நான் யாருக்கோ சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். விசிக தொண்டர்களுக்கு தான் தெரிவிக்க விரும்புகிறேன். சமூக வலைத்தளப்பதிவுகள் மூலம் உங்களை குழப்பலாம்.

Also Read: அரசியல் வன்மம்.. நயினார் நாகேந்திரனிடம் சண்டைக்கு சென்ற மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வாக்கு சதவிகிதம் எல்லாம் குறைந்திருக்கிறது. அதனைப் பற்றியெல்லாம் பேசாமல் விசிகவை பற்றி மட்டும் பேசுகிறார்கள். காரணம் தமிழக அரசியல் விசிகவை மையப்படுத்தி தான் உள்ளது. விசிகவை பலவீனப்படுத்த வேண்டும் என செயல்படுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்ககூடாது.

மேலும் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று சொன்னது தவெகவை மிரட்டுவதற்காக அல்ல. எங்களுக்கான சுதந்திரம் அங்குள்ளது என்பதை தெரிவிக்கவே கூறினேன். பதவிக்காக தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு கொடுத்தார்கள் என சில பேர் சொல்கிறார்கள். தவெக அமைச்சரவையில் இருந்து வெளியேறி இந்த ஆட்சி தொடரவும் எங்களால் ஆதரவளிக்க முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது திமுகவுக்கு கொடுத்த பதிலடியாக பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article