அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
News Image

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 2வது இடத்தில் இருக்கும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்கு வெளிநாடுகளையே நம்பியுள்ளது. அமெரிக்கா - ஈரான் போரால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு:

அமெரிக்கா - ஈரான் போர் நிரந்தரமாக முடிவு காணும் வரை காத்திருக்காமல் தற்போது இந்தியா புதிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் இறக்குமதியில் மீண்டும் ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளது. அமெரிகக்காவுடனான ஒப்பந்தம் காரணமாக ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

மீண்டும் ரஷ்யா பக்கம் இந்தியா:

ரஷ்யாவிடம் இருந்து கடந்த மே மாதம் தினசரி 19 லட்சத்து 10 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், நடப்பு ஜுன் மாதத்தில் தினசரி 26 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாயாக கச்சா எண்ணெய் இறக்குமதியை ரஷ்யாவிடம் இருந்து அதிகரித்துள்ளது. இனி வரும் மாதங்களில் இந்த இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

இதுமட்டுமின்றி வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்தும் இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. அதாவது, அங்கிருந்து மே மாதத்தில் தினசரி 6 லட்சத்து 44 ஆயிரம் பீப்பாய்களை இந்தியா இறக்குமதி செய்தது. நடப்பு ஜுன் மாதத்தில் தினசரி 6 லட்சத்து 36 ஆயிரம் பீப்பாயாக அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியா, வெனிசுலா:

இதுமட்டுமின்றி சவுதி அரேபியாவிடம் இருந்து தினமும் 3 லட்சத்து 84 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய்யும், வெனிசுலாவிடம் இருந்து தினசரி 2 லட்சத்து 9 ஆயிரம் பீப்பாயும் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இனி வரும் காலங்களில் இந்தியாவில் வராமல் இருப்பதைத் தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? பசுமை எரிசக்திகளை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? என்பதையும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவை விலகும் இந்தியா:

மேலும், இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதும் குறைந்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து மே மாதம் தினசரி 2 லட்சத்து 52 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது.

ஆனால், இந்த ஜுன் மாதத்தில் தினசரி 91 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் மட்டுமே இந்தியா வாங்கி வருகிறது. இதன்மூலம் கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவைச் சார்ந்திருக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks