Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..

Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..
News Image

உலகின் புகழ்பெற்ற மின்சார கார் நிறுவனமாக Tesla  நிறுவனம் உள்ளது . எலான் மஸ்கிற்கு சொந்தமான Tesla  நிறுவன மின்சார கார்களை வாங்கி பயன்படுத்துவது ஒரு கெத்து தான். இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் Tesla  நிறுவன கார்கள் விற்பனைக்கு வந்தன.

இந்தியாவில் மிகப்பெரிய விற்பனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய சந்தையில் Tesla  நிறுவனம் கால் பதித்தது. ஆனால் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை. இந்நிலையில் Tesla நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே Tesla  நிறுவன கார்களுக்காக புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி கையில் 6 லட்சம் ரூபாய் இருந்தாலே போதும் Tesla  கார் உங்களுக்கு சொந்தமாகிவிடும். Tesla  நிறுவனம் தனது Model Y காரை இந்தியாவில் வாங்குபவர்களுக்காக ஒரு புதிய, எளிமையான திட்டத்தை (Ease of Ownership Programme) அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி நீங்கள் வெறும் 6 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி Model Y Tesla காரை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். அதன் பிறகு, இதற்கான மாதத் தவணை தோராயமாக 39,990 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

Tesla  இந்தியாவின் தலைவர் சரத் அகர்வால் இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில் பொதுவாக ஒரு பெட்ரோல் காரை வைத்திருப்பவர்கள் எரிபொருள் (பெட்ரோல்) மற்றும் பராமரிப்பிற்காக மட்டுமே மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். அதுவே அவர்கள் டெஸ்லா மின்சாரக் காரை (E-Lease முறையில்) வாங்கும்போது, இந்த 20,000 ரூபாய் பெட்ரோல் செலவு மிச்சமாகிறது என்கிறார். அதாவது, நீங்கள் கட்டும் மாதத் தவணையான ரூ.39,990-ல் இந்த ரூ. 20,000 சேமிப்பைக் கழித்துப் பார்த்தால், வெறும் 20,000 ரூபாய் கூடுதல் செலவில் உலகின் பாதுகாப்பான மற்றும் அதிகம் விற்பனையாகும் ஒரு காரை ஓட்ட முடியும் என்கிறார்.

மற்ற கார்களைப் போல 6 மாதத்திற்கு ஒருமுறை அல்லது 10,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் Tesla  கார்களுக்கு இல்லை. இதற்கு மிகக் குறைந்த பராமரிப்பே போதுமானது என்கிறார். காரில் ஏதேனும் சிறிய தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நீங்கள் சர்வீஸ் சென்டருக்குப் போக வேண்டியதில்லை. Tesla  நிறுவனம் ஆன்லைன் (Software) மூலமாகவே அதை சரிசெய்துவிடும் என கூறுகிறார். ஆன்லைனில் சரிசெய்ய முடியாத பிரச்சினைகளுக்கு, Tesla -வின் நடமாடும் சேவை குழு (Mobile Service Team) மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் உதவி செய்யத் தயாராக இருக்கும் என்பதால் இந்தியர்களுக்கு இது மிகவும் லாபம் தரும் ஒரு சலுகை என்கிறார்.

Tesla  தனது புதிய Experience Centreஐ ஹைதராபாத்தில் திறந்துள்ளதோடு, இந்தியா முழுவதும் தனது விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கார் வாங்க வங்கிகள் கடன் தருகின்றன, அதற்கு நாம் வட்டியுடன் சேர்த்து பணத்தை திரும்ப த்ருகிறோம், அதுவே இந்த திட்டத்தில் நேரடியாக டெஸ்லாவிற்கே உங்கள் பணம் செல்கிறது.பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி, குறைந்த முன்பணத்தில் ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் காரை இந்தியர்களுக்கு சொந்தமாக்குவதே Tesla-லாவின் இந்த புதிய திட்டத்தின் நோக்கம் என அவர் கூறுகிறார். இந்தியாவில் டெஸ்லாவின் model y கார் இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. Premium RWD கார் சுமார் 51 லட்சத்திற்கும், L Premium AWD கார் 61 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாது ஆனாலும் Tesla  கார் தான் வேண்டும் என்பவர்களுக்காகவே இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks