தமிழ்நாட்டில் கோயில்கள் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து செயல்படத்தப்படவிருந்த ரூ.246 கோடி மதிப்பிலான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருமணமண்டபங்கள். வணிகவளாகங்கள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக நீதிமன்ற தடையாணை காரணமாகவும் திருக்கோயில்களின் நிதிச்சுமையினை கருத்திற்கொண்டும் முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்படாத நிலையில் இருந்த ரூபாய் 115.77 கோடி மதிப்பீட்டிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூபாய் 130.8 கோடி மதிப்பீட்டிலான 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் என ஆக மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பீட்டிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியினை கொண்டு கோயில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொன்னதை செய்த தவெக

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கோயில்கள் மூலம் கிடைக்கும் வருமானம் பல்வேறு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு கோயில்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை அறிவித்தார். அதேசமயம் கோயில் வருமான நிதியை மாற்றுத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம், திருமண மண்டபம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது. இப்படியான நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் கோயில் நிதி புனிதமான பணிகளுக்கு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சுமார் ரூ.245.85 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் ரத்துச் எயப்பட்டிருக்கிறது.

Also Read: தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!

அதன்படி தஞ்சாவூர், தென்காசி, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கோவை, சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் நடக்கவிருந்த கட்டுமான பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு வரலாறுகளை தாங்கி நிற்கும் கோயில்களில் சரியான புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டாமல் அந்த நிதி மடைமாற்றம் செய்யப்பட்டது. இனியாவது உரிய விஷயங்களுக்கு அவை செயல்படட்டும் என தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article