மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
News Image

உடலில் இருந்து காயங்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியினை சேர்ந்த 75 வயது மூதாட்டி. இவர் கடந்த சில வருடங்களாக வயது மூப்பின் காரணமாக படுத்த படுக்கையாகவே இருந்து வந்துள்ளார். அவரது மகள் பாதுகாப்பில் இருந்து வரும் மூதாட்டி சற்று சுயநினைவு தவறிய வரும் ஆவார்.

ஒரு நாள் மூதாட்டியை அவரது மகள் குளிக்க வைக்கும் பொழுது உடலில் சில காயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தனது தாயிடம் கேட்ட பொழுது அவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை. சுயநினைவின்றி இருந்து வருவதால் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். மகளும் இது படுத்த படுக்கையாக இருப்பதாலும், இல்லை வேறு ஏதேனும் இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளார்.

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை

இன்னிலையில் மூதாட்டியின் மகள் வெளியே சென்றிருந்த பொழுது மர்ம நபர் ஒருவர் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கத்தி கூச்சல் போட்டுள்ளார். அதனை கேட்டு பக்கத்து வீட்டினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியள்ளனர். அதனையடுத்து குமாரபாளையம் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

மேலும் பாலியல் தொல்லையால் காயமடைந்த மூதாட்டி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜி ( வயது 55 ) என்பது தெரிய வந்தது. இவர் அப்பகுதியில் தான் தோன்றித்தனமாக சுற்றி வந்ததும், இவருக்கு குடும்பம் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks