தூய்மை பணிகளை பொது-தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு, விசாரணைக்காக திடீரென கரூர் காவல்துறையினர் வந்ததால் பரபரப்பு.

விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சந்திப்பிற்கு பின்னணியில் கூட்டணி கணக்குகள் இருப்பதாக தகவல்.

நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,08,800-க்கு விற்பனை. ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனை.

மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்து ஆய்வு செய்த பின்னரே அது பற்றி தெரிவிக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் விளக்கம்.

68-வது பிறந்தநாளை கொண்டாடும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து. அவரது தைரியம், எளிமை, பணிவு, அர்ப்பணிப்பு நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக புகழாரம்.

நீட் மறு தேர்வு நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று நாடு தழுவிய அளவில் முறைகேடு தடுப்பு ஒத்திகை. மாநில அரசுகளுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய தேசிய தேர்வு முகமை நடவடிக்கை.

நீட் மறுதேர்வு எழுதும் மராட்டிய மாணவர் அப்துல்லா என்பவருக்கு, ஹால் டிக்கெட்டில் அபுதாவியில் தேர்வு மையம் என இருந்ததால் அதிர்ச்சி. புகாரை அடுத்து, இன்று மாலை 4 மணிக்குள் மையத்தை மாற்றித் தருவதாக NTA உறுதி.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க் கப்பல்களை நாளை கொல்கத்தாவில் நடைபெற உள்ள விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்தியாவில் முன்பு அடிக்கடி பிரதமர்கள் மாறிக்கொண்ட இருந்த சூழலில், கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி நிலையான ஆட்சி நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு.

தற்போது ஒரு போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களை வீணடித்து, ஏராளமான உயிர்களையும் இழந்துள்ளதாகவும், இவ்வளவு இழந்தும், போர் தொடங்குவதற்கு முன் இருந்தததை விட ஒரு மோசமான இடத்திற்கு வந்து நிற்பதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு.

Source: Read Full Article