IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா

IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
News Image

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட மற்றும் ஒருநாள் தொடரில் ஆடியது. இரு அணிகளும் மோதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொரட இந்திய அணி கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

ஷாகிதி சதம்:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. குர்பாஸ் 5 ரன்களுக்கும், இப்ராஹிம் 11 ரன்களுக்கும், ரஹ்மத் ஷா 5 ரன்களுக்கும் அவுட்டாக, டார்விஷ் ரசூலியும் 1 ரன்னுக்கும் அவுட்டானார். 36 ரன்களுக்கு 4 விக்கெட் விழுந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 100 ரன்களை எட்டுமா? என்ற கேள்வி எழுந்தது.

அப்போது கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதியுடன்  ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். அபாரமாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், பிரின்ஸ் யாதவ் ஆகியோரது பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர். அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் விளாச, ஓமர்சாய் 50 ரன்னில் அவுட்டானார். பின்னர், அடுத்தடுத்து வந்தவீரர்கள் அவுட்டாக தனி ஆளாக போராடிய கேப்டன் ஷாகிதி சதம் விளாசினார். அவர் கடைசி விக்கெட்டாக 131 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 102 ரன்கள் எடுத்து அவுட்டாக இந்தியாவிற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரோகித் - ஜெய்ஸ்வால் அசத்தல்:

இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் - ரோகித் ஷர்மா ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. இந்தி ஜோடி நிதானமாக தொடங்கி அதிரடி காட்டியது. கடந்த இரு போட்டியில் பெரியளவு அசத்தாத ரோகித் சர்மா இந்த போட்டியில் அசத்தினார். இருவரும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச இந்திய அணி சிரமம் இல்லாமல் இலக்கை நோக்கிச் சென்றது.

சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த ரோகித் சர்மா 69 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போதே இந்திய அணி 170 ரன்களை எட்டி இலக்கை நெருங்கியது. மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் சதம் விளாச இந்திய அணி 28.4 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபார வெற்றி:

இதன்மூலம் டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. நீண்ட நாட்களாக தடுமாறி வந்த ஜெய்ஸ்வாலும் சிறப்பான பேட்டிங்கால் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் தனது ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வெற்றியால் இந்தியா 1-0 என்று டெஸ்ட் தொடரையும், 3-0 என்று ஒருநாள் தொடரையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks