கவின் ஆணவக் கொலை: காதலியின் அப்பா காவல் உதவி ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்!

கவின் ஆணவக் கொலை: காதலியின் அப்பா காவல் உதவி ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்!
News Image

நெல்லை ஐடி பொறியாளர் கவின் கொலை வழக்கில் காதலியின்  அப்பா சரவணனுக்கு (காவல் உதவி ஆய்வாளர்) ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காதலியின் அப்பா காவல் உதவி ஆய்வாளர் பணிபுரிந்த சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணன் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது வழங்கும் பட்சத்தில் வழக்கு விசாரணை பாதிக்க நேரிடும் என ஆட்சேபனை தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் வழக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் சாட்சியங்களை கலைக்க மாட்டோம் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஒரு லட்சம் மதிப்பில் பிணை பத்திரம் வழங்க வேண்டும்

இதனைத் தொடர்ந்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில். மனுதாரர் இந்த வழக்கின் சாட்சியங்களை சந்திக்கவும் கலைப்பதற்கான முயற்சியோ செய்யக்கூடாது. என்றும் மனுதாரர் மறு உத்தரவு வரும் வரை கோயம்புத்தூரில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து இடவேண்டும், என்றும் ஒரு லட்சம் மதிப்பில் பிணை பத்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை வழங்கி மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks