புனே ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு திருமணம்

உண்மை காதலுக்காக உயிரையே கொடுக்கும் காதல் வரிகளுக்கு மத்தியில் காதலுக்காக வருங்கால கணவனை கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர செய்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் கேதன் விஷால் இவருக்கு வயது 25, இவரது குடும்பம் மிகவும் வசதி படைத்த குடும்பமாகும், இவர் குடும்பத்தினரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனராக கேதன் விஷால் இருந்துள்ளார். இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த நிலையில் சியா கோயல் என்ற பெண்ணுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தனது வருங்கால மனைவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தங்கள் பகுதியில் உள்ள லோகாகாட் கோட்டைக்கு சென்றுள்ளனர்.

பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த கேதன் விஷால்

அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில் 400 அடி பள்ளத்தில் தவறி கிழே விழுந்துள்ளார் கேதன் விஷால், இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்துள்ளார். இதனை பார்த்த வருங்கால மனைவி சியா கோயல் கதறி துடித்துள்ளார். பலத்த காற்று வீசியபோது புகைப்படம் எடுக்க முயன்றபோது கேத்தன் தவறி விழுந்துவிட்டதாக சியா கோயல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கேதன் விஷால் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் கேதன் விஷாலுக்கும், சியா கோயலுக்கும் திருமணம் நிச்சயம் நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் ரூ.17 கோடி செலவில் இவர்களது திருமணத்தை ஆடம்பரத் திருமணம் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருந்தது.

சிக்கிய வருங்கால மனைவி

இந்த நிலையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதியன்று புனே அருகே உள்ள லோககாட் கோட்டை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் கேதன் அகர்வால் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் சியா கோயலுக்கும், சேத்தன் சவுத்ரி என்பவருக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இதனால் கேதனை திருமணம் செய்ய சியா கோயலுக்கு விருப்பமில்லாத காரணத்தால் காதலனுடன் இணைந்து இந்த கொடூர திட்டத்தை சியா செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிக்கியது எப்படி.?

சிசிடிவி, செல்போன் அழைப்புகள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் சியா மற்றும் சேத்தன் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பாக கடந்த ஜூன் 14-ம் தேதியே கேதன் விஷாலை கொலை செய்ய முயற்சியானது நடைபெற்றுள்ளது. அப்போது பாம்பு இருப்பதாக பயத்தை காட்டி மலை உச்சியில் இருந்து தள்ள முயன்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

Source: Read Full Article