கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வடமாநில இளைஞரை காவல் துறை கைது செய்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று இரவு 3 வயது பெண் குழந்தையை வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவரைப் பொதுமக்கள் பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர், அந்த குழந்தைக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனைதொடர்ந்து போக்சோ வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பாதுகாப்பு இல்லை எனவும், வட மாநிலத்தவரை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியும் கும்மிடிப்பூண்டி சிப்காட் சாலையில் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்புக்காக ஸ்ட்ரைக்கிங் போர்ஸ் மற்றும் வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது.

காவல் துறையினர் பேச்சுவார்த்தையை ஏற்காத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து, போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஏற்கனவே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு சாலை ஓரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read| TASMAC shops : சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு

பின்பு அங்கு வந்த பொன்னேரி சாரா ஆட்சியர் அப்துல் ராசிக், உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ரோந்து பணிகளை அதிகரிக்க செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வடமாநில இளைஞர்களுக்கு அதிக அளவிலான கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஈசியாக கிடைப்பதாகவும் உள்ளூர் வாசிகளான நாங்கள் இங்கே வாழ முடியவில்லை எனவும் இது ஒரு மினி வட மாநிலமாக மாறிவிட்டதாகவும் எந்த ஒரு ஆவணம் இன்றி வட மாநில இளைஞர்கள் அதிக அளவில் இங்கே தங்கி இருப்பதாகவும் அவர்களை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வட மாநில கொலையாளியை கைது செய்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

Source: Read Full Article