பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்

பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
News Image

பெரியபாளையம் இறால் தொழிற்சாலையில் நடந்த வாயு விபத்தை அடுத்து, 23 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விபத்தில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 23 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துயர நிகழ்வில் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். இதில் இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டாலின் மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, குமார் நேரில் ஆறுதல்

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன், குமார் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தனர். உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தி உள்ளன.

ஆலை உரிமையாளர்கள் கைது

இந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் மோகன், நிர்வாகி டேனியல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. சுமார் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூக்கு மற்றும் வாயில் ரத்த கசிவு ஏற்பட்டது.

இதில் அவர்கள் அனைவரும் மயங்கிய நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மஞ்சங்கரணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்சியர் நேரில் ஆய்வு

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தொழிற்சாலையில் ஆய்வு செய்த பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சைக்கான விவரங்களை கேட்டறிந்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks