கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் இன்று பிற்பகல் வழிபாடு நடத்துகிறார் முதலமைச்சர் விஜய் - விரைவில் மீண்டும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்லவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,10,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.13,800-க்கு விற்பனையாகிறது.

வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கை மறு விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் அதிரடி உத்தரவு

அரசியலில் நுழைய உள்ளதாக பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

“மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடியை கிட்டத்தட்ட கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் விவசாயிகளை காப்பாற்ற டெல்டா பாசனப் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” - பாமக தலைவர் அன்புமணி

தொடர் மின்வெட்டால் விவசாயம் கடும் பாதிப்பு - அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிக்கை

"அ.தி.மு.க என்பது எங்கள் பங்காளி கட்சிதான்" - திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்

சென்னை அயனாவரத்தில் இன்று அதிகாலை வீடு புகுந்து 63 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் உ.பி.யைச் சேர்ந்த யோகேஷ் (45) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை

மதுரை: அரசு பேருந்து ஒட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது

இளம் வயதில் சிம்பொனி இசையை உருவாக்கி, பதிவு செய்துவிட்டு லண்டனில் இருந்து திரும்பிய லிடியன் நாதஸ்வரம் விமான நிலையத்தில் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னிஅரசு உள்ளிட்டோர் வரவேற்பு

சிதம்பரம் அருகே குடும்பப் பிரச்னையில் எறும்புக் கொல்லி பூச்சி மருந்தை சாப்பிட்ட இளைஞர்; மெடிக்கலில் வைத்து அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் உயிரிழந்த துயரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி 19 சவரன் நகைகள் கொள்ளை

ஆவடியில் 4 மணி நேரமாக மின்வெட்டு; ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கடலூர் மாவட்டத்தில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம்

Source: Read Full Article