IRAN USA War: எல்லாம் ஓவர்..! வாரக்கடைசில அமைதி ஒப்பந்தம், ஈரான் கூட இனி சண்டை இல்லை - ட்ரம்ப் அறிவிப்பு

IRAN USA War: எல்லாம் ஓவர்..! வாரக்கடைசில அமைதி ஒப்பந்தம், ஈரான் கூட இனி சண்டை இல்லை - ட்ரம்ப் அறிவிப்பு
News Image

IRAN USA War Trump: ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ஐரோப்பாவில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் உடனான ஒப்பந்தம் தயார்..!

ஈரானில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறப்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், ஹார்மஸ் நீரிணை திறக்கப்படும் என்றும், இந்த நிகழ்வு சில நாட்களுக்குள் நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரானுடனான போருக்கு நாங்கள் ஒரு சிறந்த தீர்வைக் கண்டடைந்துள்ளோம். நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் இந்த நீரிணை அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும். அது விரைவில், மிக விரைவில், ஒருவேளை ஐரோப்பாவில் இந்த வார இறுதியில் கூட நடக்கலாம். மிக முக்கியமாக, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது என்பதற்கான ஒப்புதல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதை அடைவதற்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் முழு நோக்கமே அதுதான். எனவே, இது ஒரு மிகப் பெரிய விஷயம்" என்று அவர் கூறினார்.

உலக தலைவர்களுடன் ஆலோசனை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் அண்மையில் பேசியதோடு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடனும் பேசியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விரைவில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுடன் பேசவிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் இறுதி அம்சங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், கையெழுத்திடும் விழா குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக் ஈரான் மீதான புதிய தாக்குதல்களை கடைசி நேரத்தில் நேற்று ட்ரம்ப் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அமைதி ஒப்பந்தம் எங்கே? எப்போது?

அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதேநேரம், தெஹ்ரான் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது இரவாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று ட்ரம்ப் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டன. ஐரோப்பாவில் இந்த வார இறுதிக்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும்.அதில் ட்ரம்பிற்கு பதிலாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Chennai Police: சென்னை காவல்துறையை கலைத்து போட்ட CM விஜய் - 29 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம், உங்க ஏரியா?

பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான,  ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்த வாரம் முழுவதும் இரு தரப்பினரும் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டதால், ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைதி ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார்.

இந்தியர்கள் மகிழ்ச்சி

அமெரிக்கா ஈரான் இடையேயான போரால் ஹார்மஸ் நீரிணை வழியான சர்வதேச நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநீயோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கத்தை இந்தியர்களும் பல்வேறு வகையில் உணர்ந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு எரிபொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வாடகை வாகனங்களுக்கான கட்டணம் உயர, அத்தியாவசிய பொருட்களுக்கான விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.  இந்த விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், போர் முடிவுக்கு வரவுள்ளதாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தியர்களிடையே சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks