தென் கொரியா உடனான தனது எல்லையில், பியோங்யாங் ஒரு "தாக்குதல் நிலைப்பாட்டை" முன்னெடுத்துள்ள நிலையில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனைகளை மேற்பார்வையிட்டார் என்று அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ இன்று செய்தி வெளியிட்டது.

முக்கிய அதிநவீன ஆயுதங்களின் சோதனைகளை மேற்பார்வையிட்டபோது, "எந்த எதிரியும் எதிர்கொள்ளத் துணியாத வகையில், கொடிய மற்றும் அழிவுகரமான தாக்குதல் திறனை" வலுப்படுத்துவது, வட கொரியாவின் தற்காப்புக் கொள்கையின் ஒரு நோக்கம் என்று கிம் ஜாங் உன் கூறியதாக கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

1950-53 கொரியப் போர் தொடங்கிய ஆண்டு நிறைவு நாளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தென் கொரியாவிற்கு எதிரான படை பலம்

கேசிஎன்ஏ அறிக்கையின்படி, அந்த சோதனைகளில் பின்வருவன அடங்கும்:

மேம்படுத்தப்பட்ட 240-மிமீ பல்முனை ஏவுகணை ஏவுதள அமைப்பு, 90 கிமீ (56 மைல்கள்) வரை செல்லும் திறன் கொண்டது.

விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட மூலோபாய இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட "சிறப்புப் பணி" வெடிமுனையைக்(Special Mission Warhead) கொண்ட ஒரு தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணை, மற்றும்,

நீட்டிக்கப்பட்ட வரம்பு(Extended Range) குண்டுகளைக் கொண்ட 155-மிமீ சுய-இயக்க ஹோவிட்சர்

தெற்கு எல்லையில், வட கொரியாவின் தாக்குதல் திறனை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த சோதனைகள் நிரூபித்துள்ளதாக கிம் கூறினார். அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உட்பட, தென் கொரியாவில் உள்ள சாத்தியமான இலக்குகளை அவர் குறிப்பிட்டதாக கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

வட கொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரான ஆய்வாளர் யாங் மூ-ஜின், பியோங்யாங் வழங்கிய விவரங்கள் "தென் கொரிய தலைநகர் பகுதிக்கு எதிரான ஒரு பலப் பிரயோகத்திற்கு" சமம் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பியாங்யாங் 'மிகவும் துல்லியமான' ஆயுதங்களை உருவாக்குகிறது

பியாங்யாங் தனது ஆயுதத் திட்டங்களில், தானியக்கம்(Automation), நீண்ட தூர தாக்குதல் திறன் மற்றும் "அதி துல்லியம்" ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது. செவ்வாயன்று வட கொரியா தனது முதல் 5,000 டன் எடை கொண்ட சோ ஹியோன் என்ற போர்க்கப்பலை சேவையில் ஈடுபடுத்திய சில நாட்களுக்குப் பின், இந்த சமீபத்திய சோதனைகள் நடைபெற்றுள்ளன.

2019-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவத் திறன்களை விரிவுபடுத்த வேண்டும் என வட கொரியத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே, ராஜதந்திர முயற்சிகளை மீண்டும் தொடங்க முடியும் என்று கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

Source: Read Full Article