Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?

Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
News Image

Passport Price Hike: புதியதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போருக்கு 2,500 ரூபாயும், தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 5000 ரூபாயும் இனி கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

பாஸ்போர்ட்களுக்கான கட்டணம் உயர்வு

மத்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட் என்பது வெளிநாடு பயணங்களுக்கான ஆவணம் மட்டுமே எனவும், அது இந்திய குடிமகன் என்பதற்கான அடையாளம் இல்லை எனவும் அண்மையில் அரசு தரப்பில் வழங்கப்பட்ட விளக்கம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் தான் 1980-ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, அத்தியாவசிய பயண ஆவணமான பாஸ்போர்ட்டிற்கான கட்டண முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய பாஸ்போர்ட்கள் மற்றும் தட்கல் சேவை ஆகிய இரண்டிற்குமான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண அமைப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

பாஸ்போர்ட்டிற்கான புதிய கட்டண விவரம்:

36 பக்கங்கள் கொண்ட புதிய அல்லது மீண்டும் பெறப்படும் (ReIssued) பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பாஸ்போர்ட் அல்லது 60 பக்கங்கள் கொண்ட மீண்டும் பெறப்படும் பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் சேவைக்கு, விண்ணப்பதாரர்கள் முன்பு ரூ.4,000 செலுத்தியதற்கு பதிலாக இனி ரூ.6,000 செலுத்த வேண்டும்.

முழுமையான புதிய கட்டண விவரங்கள்:

1. 36 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்

வழக்கமான கட்டணம் - ரூ.2,500

தட்கல் கட்டணம் - ரூ.5,000

2. 60 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்

வழக்கமான கட்டணம் - ரூ.3,500

தட்கல் கட்டணம் - ரூ.6,000

18 வயதை கடந்தவர்களின் பாஸ்போர்ட் தொலைந்து/சேதமடைந்தால்

3. 36 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்

வழக்கமான கட்டணம் - ரூ.5000

தட்கல் கட்டணம் - ரூ.7,500

4. 60 பக்கங்களை கொண்ட பாஸ்போர்ட்

வழக்கமான கட்டணம் - ரூ.6000

தட்கல் கட்டணம் - ரூ.8,500

18 வயதுக்கு குறைவான விண்ணப்பதாரர்கள்

5. புதிய பாஸ்போர்ட்/ மீண்டும் பெறுதல் (36 பக்கங்கள்)

வழக்கமான கட்டணம் - ரூ.1,750

தட்கல் கட்டணம் - ரூ.4,250

6. தொலைந்து போவது/சேதமடைந்த பாஸ்போர்டிற்கான மாற்று (36 பக்கங்கள்)

வழக்கமான கட்டணம் - ரூ.4,250

தட்கல் கட்டணம் - ரூ.6750

சான்றுகளுக்கான கட்டண விவரங்கள்:

பாஸ்போர்ட் அடிப்படையில் வழங்கப்படும் காவல்துறை அனுமதிச் சான்றிதழ் (PCC), ஒப்படைப்புச் சான்றிதழ், உலகளாவிய நுழைவுத் திட்டச் சரிபார்ப்பு மற்றும் இதர சான்றிதழ்களுக்கான கட்டணம் இந்தியாவில் ரூ.750 ஆகவும், வெளிநாடுகளில் $40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பயண ஆவணங்களைப் பொறுத்தவரை, அவசரகாலச் சான்றிதழ் வெளிநாடுகளில் $15 கட்டணத்தில் தொடர்ந்து வழங்கப்படும். அதேசமயம், அடையாளச் சான்றிதழுக்கு இந்தியாவில் ரூ.1,000 மற்றும் வெளிநாடுகளில் $50 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு

பாஸ்போர்ட்டிற்கான காலாவதி தேதி

திருத்தப்பட்ட அட்டவணை IV-இன் படி, வயது வந்தோர் பிரிவின் கீழ் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து செல்லுபடியாகும். அதேசமயம் சிறார்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது விண்ணப்பதாரர் 18 வயதை அடையும் வரை, இவற்றில் எது முந்தையதோ அதுவரை செல்லுபடியாகும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பயனர்கள் மீண்டும் உரிய அதிகாரிகளை அணுகி நடைமுறைகளை பின்பற்றி பாஸ்போர்டை அப்டேட் செய்ய வேண்டும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks