தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இதுதொடர்பாக, அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்திற்கு எதிரானது:

கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா விஜய்?

அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?

கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு?

தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?

உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற… pic.twitter.com/NorupZ9KE1ad

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 26, 2026

தமிழகம் உரிமை காக்கப்படுமா?

புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கண்டனம்:

ஜனநாயகன் படத் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவின் தொழில் முழுக்க முழுக்க கர்நாடகாவிலே அமைந்துள்ளது. இவர் இதற்கு முன்பு அரசியலில் எந்த தொடர்பும் இல்லாதவர். இவர் கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமாருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி வெங்கட் நாராயணாவிற்கு தமிழும் பெரியளவு தெரியாது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும். தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு நாலாபுறமும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Source: Read Full Article