அழுது புலம்பிய தாய்... காரை நிறுத்தி ஓடிவந்த முதல்வர் விஜய்! அப்புறம் நடந்த மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம்

அழுது புலம்பிய தாய்... காரை நிறுத்தி ஓடிவந்த முதல்வர் விஜய்! அப்புறம் நடந்த மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம்
News Image

ஈரோடுக்கு சென்ற முதல்வர் விஜய் ஒரு குழந்தைக்கு ‘விஜய்’ எனப் பெயர் சூட்டி தங்க மோதிரம் அணிவித்து கண்ணீவிட்ட தாயின் ஆழையை நிறைவேற்றினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவையிலிருந்து சாலை மார்க்கமாகச் சென்ற தமிழக முதல்வர் விஜயைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்த பெண்ணின் ஆசையை, நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்தபோது முதல்வர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திக்காமல் சென்றதால் வருத்தம்

சேலத்தைச் சேர்ந்த பூஜா ஸ்ரீ என்ற பெண், தனது மூன்று மாதக் குழந்தையுடன் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே முதல்வர் விஜய்யைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார். தனது குழந்தைக்கு முதல்வர் விஜய் பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசையுடன் அவர் அங்கு வந்திருந்தார். ஆனால், கோவையிலிருந்து பெருந்துறை நோக்கிச் சென்ற முதல்வர் விஜய், அங்கு குழந்தையுடன் காத்திருந்த பூஜா ஸ்ரீயைச் சந்திக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த அவர், கண்ணீர் மல்க தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

தாராபுரத்தில் முதல்வர் விஜய்யை எளிதாகப் பார்க்க முடிந்த நிலையில், விஜயமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தன்னைத் தடுத்து நிறுத்தியதாகவும், முதல்வர் வாகனத்திலிருந்து இறங்கி வந்து சந்திப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேனில் அமர்ந்தபடியே கையசைத்துச் சென்றது ஏமாற்றத்தை அளித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், பெருந்துறையில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்வர் திரும்பி வரும்போது அவரைச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் காத்திருப்பதாகவும் கூறினார்.

குழந்தைக்கு ‘விஜய்’ எனப் பெயர் சூட்டிய முதல்வர்!

இந்நிலையில், பெருந்துறையில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய்,  குழந்தையுடன் காத்திருந்த பூஜா ஸ்ரீயை அழைத்து பெயர் வைத்தார். அப்போது, அந்தத் தாயின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர், மூன்று மாதக் குழந்தைக்கு ‘விஜய்’ எனப் பெயர் சூட்டினார். மேலும், குழந்தையின் விரலில் தங்க மோதிரத்தையும் அணிவித்து வாழ்த்தினார்.

முதல்வரைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்தில் கண்ணீர் விட்ட தாயின் ஆசை, சில மணி நேரங்களிலேயே நிறைவேறியது. குழந்தைக்குத் தனது பெயரையே சூட்டியதுடன் தங்க மோதிரமும் அணிவித்த முதல்வரின் செயல் பூஜா ஸ்ரீயை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முதலில் ஏமாற்றத்தில் கண்ணீர் விட்ட தாய், பின்னர் முதல்வரின் சந்திப்பால் மகிழ்ச்சியடைந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks