இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?

இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
News Image

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முன்னாள் துணைப்பிரதமர் வல்லபாய் படேலின் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் ஏன் இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிறார்?, அவர் ஏன் இந்தியாவின் பிரதமராகவில்லை என்பதை விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த வல்லபாய் படேல்?

குஜராத் மாநிலத்தில் உள்ள நடியாத் பகுதியில் 1875-ஆம் ஆண்டு வல்லபாய் படேல் பிறந்தார். 1891-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வியை கரமசாத்தில் ஆரம்பப் பள்ளியிலும், பெட்லாடில் உயர்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்த படேல் தனது 16-வது வயதில்  ஜாவேர்பா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இங்கிலாந்தின் மிடில் டெம்பிளுக்கு சென்று சட்டப்படிப்பை நிறைவுசெய்த படேல், இந்தியாவிற்கு திரும்பி தனது வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார்.

சர்தார் ஆக மாறிய படேல்!

ஆங்கில பாணி ஆடைகள் அணிந்து, மேற்கத்திய விளையாட்டுகளில் பங்கேற்று வந்த படேலின் வாழ்க்கை பாதை மகாத்மா காந்தியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட பின்னர் முற்றிலும் திசைமாறியது.அதன் பின்னர் இந்தியமுறை உடைகளை அணிந்து ஆடம்பரங்களை தவிர்த்து காந்திய வழியில் வாழத்தொடங்கினார். 1917-1924 வரை அகமதாபாத்தின் முதல் இந்திய நகராட்சி ஆணையராகவும், 1924 - 1928 வரை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சித் தலைவராகவும் படேல் பணியாற்றினார். முதன்முதலில் 1918-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக கேதா சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு பிரபலமானார். இதனையடுத்து 1928-ஆம் ஆண்டு வரி உயர்வை கண்டித்து நில உரிமைகளுக்கு எதிராக படேல் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவருக்கு சர்தார் பட்டம் வழங்கப்பட்டது.

அரசியல் பிரவேசம்

இந்திய தேசிய காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வந்தவல்லபாய் படேல் 1920-இல் குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மார்ச் 1931-இல் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக தேர்வாக 1946-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தல் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்நிலையில் அதன் பிரதான போட்டியாளர்களாக நேருவும், படேலும் மாறிய நிலையில் அப்போது மொத்தமிருந்த 15 மாகாண காங்கிரஸ் கமிட்டிகளில் 12 கமிட்டிகளின் ஆதரவு படேலுக்கே இருந்தது. மீதமிருந்த 3 மாகாண கமிட்டிகளும் யாரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்தன.படேலுக்கு இத்தனை செல்வாக்கு இருந்தபோதிலும் தன் வழிகாட்டியான காந்தியின் ஆதரவு நேருவுக்கு இருந்ததால் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து படேல் விலகினார்.ஒருவேளை அப்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வாகி இருந்திருந்தால் நாட்டின் முதல் பிரதமராக படேல்தான் இருந்திருப்பார்.

இரும்புமனிதர்: நாட்டின் முதல் துணைப்பிரதமர்

1946-ஆம் ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் உள்துறை அமைச்சராகவும், அதன் தொடர்ச்சியாக அமைந்த நாட்டின் முதல் அமைச்சரவையில் துணைப்பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சுதந்திரத்திற்கு பின் சிதறுண்டு கிடந்த சுதேசி மாகாணங்களை இந்தியாவுடன் இணைக்கும் கடினமான பொறுப்பெடுத்து திறம்பட செய்துமுடித்த படேல் இரும்புமனிதர் எனவும், இந்தியாவின் பிஸ்மார்க் எனவும் அழைக்கப்பட்டார். இவர் ராஜதந்திர நடவடிக்கைகளின் காரணமாக 560-க்கும் மேற்பட்ட சுதேச மாகாணங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நிலையில், இந்தியாவுடன் இணையாமல் முரண்பாட்டை கடைபிடித்த ஹைதராபாத் மற்றும் ஜூனாகத் மாகாண இணைப்புகளிலும் இவரது பங்கு முக்கியமானது.

இறப்பும், பாரத ரத்னா விருதும்!

1950-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதியன்று மாரடைப்பு காரணமாக வல்லபாய் படேல் உயிரிழந்தார்.  நாட்டின் ஒருங்கிணைப்பில் இன்றியமையாத பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேலுக்கு அவரது இறப்புக்கு பின்  41 ஆண்டுகள் கழித்து 1991-இல்தான் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks