ஓமன் கடற்பகுதி அருகே இந்திய வணிகக்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

வணிகக்கப்பல் மீது தாக்குதல்:

ஓமன் கடற்பகுதியில் பயணித்த MSV AL JUSIFI எனும் இந்திய வணிகக்கப்பல் மீது வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் குஜராத்தை சேர்ந்த மாலுமியான கந்தர் நஹீம் அஜிஜ் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயம் அடைந்தனர். மத்தியக்கிழக்கில் பதற்றநிலை தணியாத நிலையில், வணிக்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், உயிரிழந்த மாலுமியின் உடல் மற்றும் காயமடைந்த மாலுமிகளை இந்திய வரவழைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இந்தியா கடும் கண்டனம்

வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள இந்தியா, வணிகக்கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு கடற்பகுதியில் அமைதி திரும்புவதற்கும் பதற்றத்தை குறைப்பதற்கும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும், சர்வதேச கடற்பரப்பில் தங்கு தடையின்றியும், அச்சுறுத்தல் இன்றியும் கப்பல் போக்குவரத்து நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Source: Read Full Article