School Leave Oct 21st: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை:

நேற்று இரவு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் நலன் கருதி இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அதேநேரம் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் போன்ற கல்வி நிலையங்கள் இன்று வழக்கம்போல் இயங்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மணி நேரமாக இடைவிடாது மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதோடு நனைந்தபடி பள்ளிக்கு சென்றால் உடல்நிலை பாதிப்பும் ஏற்படக்கூடும். இதனால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் விடாது அடிக்கும் மழை..

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நூறு மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி, மீண்டும் தமிழகத்தின் மழைப்பொழிவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன. மேலும் மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்கின்றன. காலை 8.30 மணிக்கு முன்பாக, சென்னையில் இன்னும் பல இடங்களில் மழைப்பொழிவு 100 மி.மீ-ஐத் தாண்டும். மழைப் பதிவு மீட்டமைக்கப்படும் காலை 8.30 மணிக்குள், மழைப்பொழிவு 100-150 மி.மீ-க்கு இடையில் முடிவடைவதை நாம் காணலாம்” என எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை

மிக கனமழை எச்சரிக்கை:

இதனிடையே, வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி இன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Source: Read Full Article