ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லு களவாணித்தனம் செய்ததாலேயே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க தயக்கம் காட்டுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவுநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்தும் ,சிலையின் கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிட அரசாங்கங்களில் நீர்வளத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், குறிப்பாக துரைமுருகன் நீர்ப்பாசன துறையில் நீண்ட காலம் அமைச்சராக இருந்தவர். அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடியார் போன்ற கடந்த 40-50 ஆண்டுகளாக பொதுப்பணித்துறையில் அமைச்சர்களாக இருந்தவர்களின் அனுபவங்களை அவர்களோடு ஆலோசித்து பெறுவதன் மூலம் நமது ஜீவாதாரப் பிரச்சினையாகிய காவிரி பிரச்சனையை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் விவசாயிகளின் எண்ணம்.

அதனை இந்த அரசாங்கம் செய்யாமல் தவிப்பதற்கு காரணம், ஆட்சி அமைப்பதற்கே அவர்கள் செய்த தில்லுமுல்லுகள், களவாணித்தனங்கள்தான். இதனால் திமுக தலைவரையும் அதிமுக பொதுச் செயலாளரையும் சந்திப்பதற்கே அவர்களுக்கு தயக்கம் இருக்கலாம். எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தயக்கம் இருக்கலாம். அதனால் தள்ளிப் போடுகின்றார்கள். இது தவறான முன்னுதாரணத்தை வருங்காலத்தில் ஏற்படுத்திவிடும்” என்று கூறினார்.

Source: Read Full Article