Anbil Mahesh: ED வளையத்தில் சிக்கிய அன்பில் மகேஷ்..! இறுகும் பிடி, ரூ.100 கோடி மட்டும் தானா? புதுப்பிரச்னை என்ன?

Anbil Mahesh: ED வளையத்தில் சிக்கிய அன்பில் மகேஷ்..! இறுகும் பிடி, ரூ.100 கோடி மட்டும் தானா? புதுப்பிரச்னை என்ன?
News Image

Anbil Mahesh ED Case: 100 கோடி ரூபாய் மோசடி புகாரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில், அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளது.

ரூ.100 கோடி மோசடி புகார் - சிக்கலில் அன்பில் மகேஷ்

கடந்த திமுக ஆட்சியின் போது தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு அனுமதிகளை வாங்கித்தர பணம் பெற்று, 100 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்ற புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பகா தமிழக போலீசார் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக நிர்வாகி அரசகுமார் மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறையும் களமிறங்கியுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா? என்ற நோக்கில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாம்.

சிறையில் அரசகுமார்..!

இந்த வழக்கு தொடர்பாக தனியார் பள்ளிகள் கட்டமைப்பு என்ற பதிவு செய்யப்படாத சங்கத்தின் நிறுவனரான அரசகுமார் கடந்த ஜுன் மாதம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த புதியதாக தனியார் பள்ளிகளை நிறுவவும், ஏற்கனவே உள்ள பள்ளிகளை விரிவுபடுத்துவது மற்றும் நீண்ட காலத்திற்கான அனுமதி ஆகியவற்றை, அரசாங்கத்தில் உள்ள தங்களது தொடர்புகளை பயன்படுத்தி பெற்றுத்தவருவதாக கூறி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு:

இந்த பணமோசடி புகாரில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்  7 மற்றும் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, தனியார் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் அங்கீகாரத்தை பெற தனக்கு பணம் கொடுங்கள் என, பள்ளி நிர்வாகங்களை அரசகுமார் நாடியுள்ளார். முன்னதாக கடந்த 2013ம் ஆண்டும் இதேபோன்ற குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விவரங்களும் தற்போதைய முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அன்பில் மகேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கைகளை தொடங்கினார்.

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு:

பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சென்னை மற்றும் திருச்சியில் போலீசார் சோதனை நடத்தினார். அதன் முடிவில் ஆவணங்கள், வங்கி விவரங்கள் மற்றும் மின்சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.  இதுதொடர்பாக சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தும் அன்பில் மகேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள்: Thirumavalavan: ”தவெக வென்றது எனக்கு எரிச்சலாக இருக்கலாம்” Brain Wash செய்த ஆதவ் அர்ஜுனா - ஓபனாக சொன்ன திருமா..!

அமலாக்கத்துறை விசாரணை..!

இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமிருந்து ஆவணங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது. இதனிடையே, 90 நாட்கள் அவகாசத்திற்குள் காவல்துறை இறுதி அறிக்கையை தாக்கல் செய்யாததன் காரணமாக, அரசகுமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks