Annamalai: டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?

Annamalai: டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
News Image

Annamalai On Toxic: டாக்ஸிக் போன்ற படங்களை பார்த்தால் பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

டாக்ஸிக் படத்தை விமர்சித்த அண்ணாமலை..!

கோயம்புத்தூரில் உதயம்பாளையம் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணமாலை பங்கேற்று பேசினார். அப்போது, “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு தலைமுறையாக இந்த தலைமுறை உள்ளது. நேற்று ஒரு படம் பார்த்தேன். இல்லை படம் பார்க்க வில்லை அதுகுறித்து கேள்விபட்டேன். இரண்டு விதமான கருத்துகள் வந்தடைந்தன. அந்த படத்தின் பெயரை சொன்னால் என் மீது யாரேனும் மான நஷ்ட வழக்கு போடக்கூடும். ஏற்கனவே என் மீது பல வழக்குகள் உள்ளன. எனவே பெயரை குறிப்பிடாமல் சொல்கிறேன்.

பெண்களுக்கான மரியாதை இல்லை..!

அந்த படம் நேற்று தான் ரிலீஸ் ஆனது. இன்று காலையில் NDTV-யில் பார்த்தேன். ஒரு பெரிய நடிகர் நடிக்கிறார். முதல் நாளே 104 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அந்த படத்திற்கான பெயரே, நாம் டாக்ஸிக் ஆக பல விஷயங்களை பேசுகிறோம். அந்த மாதிரி அந்த படத்தின் பெயர் உள்ளது. அப்போது தான் நான் பார்த்தேன் இன்று படங்களிலேயே பெண்களை சித்தரிக்கக் கூடிய ஒரு விஷயத்தை சொல்லி, முதல் நாளிலேயே 104 கோடியை வசூல் செய்து அதை ஒவ்வொரு நாளும் நாம் நமது குழந்தைகளை பார்க்க வைத்து, மாணவ செல்வங்களை பார்க்க வைத்தால் பெண்களின் பாதுகாப்பு எங்கு கிடைக்கும் இந்த நாட்டில்? ஊர் ஊராக கல்லூரி கல்லூரியாக சென்று பெண்கள் பாதுகாப்பு பற்றி தொண்டை தண்ணீர் வற்ற பேசுகிறோம். ஆனால், ஒரு படத்தை எடுத்து தணிக்கௌ குழுவிடமும் அனுமதி பெற்று தியேட்டருக்கும் கொண்டு வருகிறார்கள். அந்த படத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு இருக்கிறதா? என்று கேட்டால் மரியாதை கொடுக்கப்படவில்லை. அவ்வளவு விஷயங்கள் அந்த படத்தில் நடக்கிறது. அந்த தாக்கமும் பொதுமக்கள் மீது உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழிய வேண்டும் - அண்ணாமலை

அதனால் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் பொறுப்புணர்வுடன் கூடிய உறவுமுறை என்பது இன்றைய தலைமுறைக்கு அவசியம். நீங்கள் எல்லோருமே ஜென் Z ஆக இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியும். தனிப்பட்ட வாழ்கைக்கும், பொது வாழ்கைக்கும் இடையேயான எல்லை எது? என்பது உங்களுக்கு தெரியும். எனவே இந்த தலைமுறையினரிடம் இது குறித்து அதிகம் பேசாமல் உங்களை சிந்திக்க விடுகிறேன். காரணம் இதற்கான தீர்வு ஏதும் என்னிடமில்லை. நாம் நமது தலைமுறையில் பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் & வன்கொடுமைகள் ஆகியவை இந்த தலைமுறையில் ஒழித்து கட்டப்பட வேண்டிய ஒரு விஷயமாக நீங்கள் பார்க்க வேண்டும். கண் முன்னே தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும். ஏதோ நடக்கிறது என கடந்துபோக கூடாது” என அண்ணாமலை பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: Railway Fine: ரயில்களில் இனி இதையெல்லாம் செய்யாதிங்க..! புதிய அபராதங்களை அறிவித்த ரயில்வே நிர்வாகம் - முழு லிஸ்ட்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks